Ad Space avaiable

மஹிந்தவிடம் உதவி கோரும் முஸ்லிம் தரப்பு ..



மாகாண சபைகள் திருத்தச் சட்டம் மூலத்துக்கு எதிராக செயற்பாடுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு முஸ்லிம் தரப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சட்டமூலம் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் என முஸ்லிம் தரப்புகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில் நல்லாட்சி அரசு இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.

குறித்த சட்டமூலத்தை தடுத்து நிறுத்த செயற்படுமாறு மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பிற்கு முஸ்லிம் தரப்புகள் கோரிக்கை முன்வைத்துள்ளன.பாராளுமன்றத்தில் மஹிந்த அணியில் 53 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் மாகாண சபைகள் திருத்தச் சட்டம் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சபையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து சபை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மஹிந்தவிடம் உதவி கோரும் முஸ்லிம் தரப்பு ..  மஹிந்தவிடம் உதவி கோரும் முஸ்லிம் தரப்பு .. Reviewed by Madawala News on 9/20/2017 02:37:00 PM Rating: 5