Ad Space avaiable

எந்தவொரு இனத்தவர் மீதும் பாரபட்சம் காட்டக்கூடாது என்ற யோசனையை சில கட்சிகள் நிராகரித்துள்ளன..


எந்தவொரு இனத்தவர் மீதும் பாரபட்சம் காட்டக்கூடாது என்ற யோசனையை சில அரசியல் கட்சிகள் நிராகரித்திருப்பதாகவும் இது கவலைக்குரிய விடயம் என்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 


அரசியலமைப்பு (நிர்ணய) சபையின் வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார். 


வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கையானது அக்குழுவின் தலைவர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று அரசியலமைப்பு (நிர்ணய) சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அது தொடர்பில் உரையாற்றினார். 


முதற்தடவையாக பிரதமர் ஒருவர் அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளுக்கு தலைமைத்துவம் வகிக்கின்றார். சகல கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இதில் பங்களிப்புச் செலுத்துகின்றனர். அது மாத்திரமன்றி பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கும் நாம் போதியளவு அவகாசத்தை வழங்கியுள்ளோம். 

பல தரப்பட்டவர்களின் கருத்துக்களைக் கொண்டதாக இது அமைந்துள்ளது. 

மாறுபட்ட கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் பாரிய அர்ப்பணிப்பொன்று தேவைப்படுகிறது என்று அவர் இதன்போது குறிப்பிட்டார்.


அதேநேரம், தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தனியாக சமர்ப்பித்திருந்த யோசனைகளை இடைக்கால அறிக்கையில் உள்ளடக்க சம்பந்தப்பட்ட செயலகம் தவறியிருப்பதாகவும் அது உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் ரவூப் ஹக்கீம் அரசியலமைப்பு சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
 

எந்தவொரு இனத்தவர் மீதும் பாரபட்சம் காட்டக்கூடாது என்ற யோசனையை சில கட்சிகள் நிராகரித்துள்ளன.. எந்தவொரு இனத்தவர் மீதும் பாரபட்சம் காட்டக்கூடாது என்ற யோசனையை  சில கட்சிகள் நிராகரித்துள்ளன.. Reviewed by Madawala News on 9/22/2017 11:00:00 AM Rating: 5