Ad Space Available here

மியன்மாரில் வேகமாக பரவும் பௌத்த இனவாதம் ..


சிங்களத்தில் சத்துர பமுனுவ

தமிழில்: எம்.எச்.எம்.நியாஸ் 

நன்றி. திவயின

கடந்த மே மாதம் மியன்மாரில் உள்ள உயர்பீட பெளத்த பிக்குகளின் உயர்மட்டக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டனர்.


மாபோத்தா அமைப்புக்கு எதிராகவே அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. "அஸ்வின் விராது" தலைமையில் இயங்கும் அந்த அமைப்பு (மாபோத்தா) வுக்கு அந்த நாட்டில் இயங்கும் உயர்பீட பிக்குகளின் குழு நாடளாவிய மட்டத்தில் அவர்களால் (மாபோத்தா அமைப்பினால்) காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவித்தல் பலகைகளை அகற்றிவிடும்படி அவர்க ளுக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டது.


 "அங்ஸான் சூகி அரசின் அழுத்தத்தின் காரணமாகவே உயர்பீட பெளத்த பிக் குகள் அந்த அறிக்கையை விடுத்திருந்தனர்.மாபாத்தா அமைப்பு பெளத்த போதனைகளுக்கு எதிராக இயங்கிவரு வதாகவும் பெளத்த உயர்பீட குழு கூறி வருகிறது.மியன்மார் எங்கும் பரந்து விரிந்து காணப்படும் மாபோத்தா அமைப்பின் விகாரைகள் அதன் அங்கத்தவர்கள், ஊழியர்கள் பெளத்த உயர் பீடத்தின் அறிவித் தலை ஏற்றுக் கொண்டனர். 


மென்டலே நகர் மற்றும் "கரேன்" " மாகாணத்தில் தலைப்பட்டினமாகிய பாத் நகரினால் உயர்பீடத்தின் கட்டளைகள் வேண்டுமென்றே குதர்க்கவாதத்துடன் நிராகரிக்கப்பட்டுள்ளது. 


அங்கு "விராது" பிக்குவை பின்பற்றுவோர் அமைப்பின் அறிவித்தல் பலகைகளை அப்புறப்படுத்துவதற்கு பதிலாக "கண்கவர்" அறிவித்தல் பலகையொன்றைக் காட் சிப்படுத்தும் அளவுக்கு துணிச்சலுடன் இயங்கி வருகின்றனர்.


 "பாத் நகரில் உள்ள தயெல்டல் விகாரைக்கு வந்த "கரேன்" நகரத்தின் பெளத்தர்கள், பெளத்த உயர்பீட தலைவர்களின் அறிவித்தலுக்கு தமது எதிர்ப்பை காட்டினர். 


அதேவேளை, மாபோத்தா அமைப்புக்கு தமது ஆதரவை வழங்க வந்த ஒரு இளம் யுவதி பெளத்த சமயத்தைப் பாதுகாக்கவே தாம் அங்கு வந்ததாகக் கூறினார். "கரேன் மாகாணத்தின் "அஸ்வின் விராது பிக்கு" மிகவும் பிரபல்யம் அடைந்துள்ளார்


சம்பிரதாய ஆடை ஒன்றினால் தம்மை அலங்கரித்துக் கொண்ட "கரேன் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் சிவப்பு மையினால் எழுதப்பட்ட (ஆர்ப்பாட்டத்துக்குக் கொண்டு செல்லக்கூடிய) பலகை ஒன்றை வைத்துக் கொண்டிருப்பது முக நூலில் காட்டப்பட்டு வருகிறது. 


அந்தப் படத்தில் 'விராது பிக்கு அவர்களே! நாம் உங்கள் மீது அன்பு செலுத்துகிறோம்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ஒரு பாடத்தில் விராது பிக்கு சிம்மா சனம் போன்ற ஆசனம் ஒன்றில் அமர்ந்து கொண்டிருப்பதையும் அவரைச் சுற்றிவர ஆயுத பாணியாக கரேன் மாகாண எல்லையின் பாதுகாப்புப் படையின் குழுவொன்று கூடியிருப்பது போலவும் காட்டப்பட்டுள்ளது. 


அங்கு பெளத்த கொடிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள் ளதும் தெளிவாகத் தெரிகிறது. "மியன்மாரிலுள்ள பெளத்த உயர் பீடத்தின் அறிவித்தல்களின் மூலம் விராது பிக்குவின் அமைப்பு செயலிழந்து விடுமென்று சிலர் எதிர்பார்த்திருக் கலாம். 


ஆனால் அது முன்பை விடவும் பலமாக பரவிக் கொண்டு செல்வது தெளிவாகத் தெரிகிறது என்று மியன் மாரின் இனவாதம் பற்றிய கட்டுரை ஒன்று எடுத்துக் கூறுகிறது. 


அக்கட்டுரையில் அவுஸ்திரேலியாவின் தேசிய ஆய்வுப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஜெஸ்டின் செம்பர் இதனை குறிப்பிட்டி ருந்தார்."சுகீ யின் அரசாங்கம் பற்றி அஸ்வின் விராது பிக்குவோ மாபோபத்தா அமைப்போ திருப்தியுடன் இல்லை.கயிேன் அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அஸ்வின் விராது பிக்கு அண்மையில் பகிரங்கமாக அறைகூவல் ஒன்றை விடுத்துள்ளார்.ஶ்ரீ லங்காவின் இனவாதிகள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவைப் பற்றி எவ்வாறான கருத்தை வைத்துள்ளார்களோ அவ்வாறான கருத் தொன்றையே மியன்மாரின் இனவாதிகள் "சுகி" மீது வைத்துள்ளனர் என்பது தெரிகிறது.


"கரேன்" மாகாணத்தில் வாழும் மாபாத்தா அமைப்பு பல்வேறு நடவ டிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. பெளத்த விகாரைகளுக்கு அருகில் பல்வேறு நிகழ்ச்சிகளை அவை நடத்தி வருகின்றன. 


நிதிஉதவி வழங்கல், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான விசேட சிகிச்சை, இரத்ததான நிகழ்ச்சிகள் மற்றும் பாட சாலை அபிவிருத்தி விடயங்களுக்கும் அவற்றில் சிலவாகும்.


மேலும் அங்குள்ள பெளத்த மக்களது சமூக நிலை மற்றும் பொருளாதார நிலை போன்றவற்றை கட்டியெழுப் புவதற்கும் விராது பிக்குவை பின்பற் றுவோர் அயராது உழைத்து வருகின் றனர்.


"கரேன்" போராளிகள் மற்றும் மியன்மார் அரசின் பாதுகாப்புப் படைக்கும் இடையில் நீண்ட கால மாக சிவில் யுத்தம் ஒன்று நடைபெற்று வந்துள்ளது. 90 களில் பாத் மாகாணம் பெளத்த யாத்திரிகர்களின் கேந்திர நிலையமாகியது. அந்த நாட்டு மக்க ளது பேராதரவுக்கும் கெளரவத்துக்கும் பாத்திரமான ஒரு தேரரான 'யூவினய' என்பவர் அந்த மாவட்டத்தில் உள்ள தமன்யா எனும் மலையில் இருந்தார். வினய தேரரின் முக்கிய சீடரான யூ துஸானர் என்பவரே தற்போது அந்த மாகாணத்தில் தலைமை பிக்குவாக செயல்பட்டு வருகிறார். அது மட்டு மன்றி துஸானா பிக்குவுக்கும் விராது பிக்குவுக்கும் இடையில் மிக நெருக்க மான தொடர்புகள் ஏற்பட்டுள்ளது.


1994 இல் துஸானா பிக்குவின் தலைமையின் கீழ், "கரேன் பெளத்த போராளிகள் "கரேன்" தேசிய சங்கத் திலிருந்தும் விலகி ஜனநாயக பெளத்த "கரேன் படையை அமைத்துக் கொண் டனர். "கரேன்" தேசிய சங்கத்தில் கிறிஸ்தவ தலைமை பீடத்தைப் பற்றி விரக்தியடைந்த நிலையில் அவர்கள் இருப்பதே அப்பிரிவினைக்கு அடிப் படைக் காரணமாகும். இந்த பெளத்த படை அரசுடன் சமாதான ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டு விட்டு அரச படைகளுடன் இணைந்து "கரேன்"கிறிஸ்தவ படைக்கு எதிராகப் போரா டினர்.


 "கரேன் மாகாணத்தை முழுமை யாக பெளத்த மாகாணமாக மாற்றுவதே துஸானா பிக்குவின் ஒரே நோக்க மாக இருந்தது. 2016 இல் மியன்மார் அரச படை அந்த "கரேன் பெளத்த படையை மியன்மாரின் எல்லை பாது காப்புப் படை அணியாக நியமனம் செய்தது. அவ்வாறு நியமிக்கப்பட்ட படையே விராது பிக்குவின் பாது காப்புப் படையாக மாறியுள்ளது. 


2016 இல் துஸானா பிக்கு மற்றும் மாபோத்தா அமைப்புக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட் டது.


துஸானா பிக்கு தமது பெளத்த உபன்னியாசங்களினூடாக நாட்டில் "முஸ்லிம்களது பரவல்" பற்றியும் கூறி வருகிறார். 


அதேவேளை, இந்த துஸானா பிக்குவின் புதிய அமைப்பு சுகீயின் அரசாங்கத்துக்கு பெரும் தலையிடியாகவும் எச்சரிக்கையாகவும் மாறியுள்ளது. மியன்மாரில் வேகமாகப் பரவி வரும் பெளத்த இனவாதத்துக்கு எதிராக சுகீயின் அரசு எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்பது பற்றி எமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. 


எவ்வாறாயினும் தேரவாத பெளத்த உலகின் பாதுகாப்புக்காக விராது பிக்கு எழுப்பும் குரல் இலங்கை பெளத்தர்களான எமக்கும் மிக முக்கியமானதாகும். அதனால் மியன்மாரில் பெளத்த செயற்பாடுகள் பற்றி ஸ்ரீ லங்காவின் பெளத்தர்கள் அறிந்திருப்பது மிக முக்கியமானதாகும்.

மியன்மாரில் வேகமாக பரவும் பௌத்த இனவாதம் .. மியன்மாரில் வேகமாக பரவும் பௌத்த இனவாதம் .. Reviewed by Madawala News on 9/01/2017 04:15:00 PM Rating: 5