Kidny

Kidny

குறுக்கு வழியில் தேர்தல் திருத்தச்சட்ட மூலத்தை கொண்டுவந்த நல்லாட்சி




நல்லாட்சி அரசு மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை   குறுக்கு வழியில்  இன்று பாராளுமன்றில் சமர்பித்துள்ளாக தகவல் கசிந்துள்ளது.

20 ம் திருத்தம் தொடர்பில் இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான நிலையில்,

கடந்த ஜூலை மாதம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு பின்னர்  பாராளுமன்ற குழு நிலையில் மேலதிக திருத்தங்கள் பல சேர்க்கப்பட்டுள்ள தேர்தல் திருத்த  சட்டமூலம் இன்று மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தேர்தல் சட்ட திருத்தங்கள் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை வெகுவாக பாதிக்கும் என தெரிவிக்கப்படும் அதேவேளைஇந்த நடவடிக்கை  தங்கையை காட்டி அக்காவை கட்டிகொடுக்கும் செயல் என விமர்சிக்கப்படுகிறது.

நாளை வாக்கெடுப்பிற்கு வரவுள்ள உத்தேச தொகுதி முறையிலான தேர்தல் முறையில் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாரிய பின்னடைவை சந்திக்கும் என தகவல் வெளியிடப்பட்டுள்ள அதேவேளை கிழக்கு மாகாண சபையில் அதிகப்படியான பெரும்பான்மையை தமிழ் தரப்பு பெற்றுக்கொள்ளுமிடத்து மாகாண சபைகள் ஊடாக வடக்கு கிழக்கு இணைப்பு சத்தியமாகலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறுக்கு வழியில் தேர்தல் திருத்தச்சட்ட மூலத்தை கொண்டுவந்த நல்லாட்சி குறுக்கு வழியில் தேர்தல் திருத்தச்சட்ட மூலத்தை கொண்டுவந்த நல்லாட்சி Reviewed by Madawala News on 9/20/2017 01:05:00 AM Rating: 5