tg travels

ஜப்பானின் நிதியுதவியின் கீழ் கண்டிப் பிரதேசத்தில் பாரிய முதலீடு ..





ஜப்பானின் நிதியுதவியின் கீழ் கண்டிப் பிரதேசத்தில் தொழிற்பேட்டை ஒன்றை ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜப்பான் நாட்டு முதலீட்டாளர்கள் மூலம் கண்டி நகர் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதே போன்று குருநாகல் மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதன் மூலம் எதிர்கால சமூகத்தினரை அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்ய முடியும் பிதமர் கூறினார்.  

குருநாகல் மகுறு-ஒய வத்த என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய தேசிய பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். நாட்டின் கைத்தொழில் துறையில் பாரிய அபிவிருத்தியை தற்பொழுது காணக்கூடியதாக இருப்பதாக குறிப்பிட்டதுடன்  எதிர்காலச் சமூகத்தினருக்காக நாட்டின் பாரிய பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு சமகால அரசாங்கம் அடிப்படைக்கான நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்திருப்பதாக தெரிவித்தார்.
 
 
வடமேல் மாகாணத்தை அபிவிருத்தியின் கேந்திரமாக தரமுயர்த்தப்படும். குருநாகல் மாவட்டத்தில் தாழிற்பேட்டை ஒன்றும் சிலாப பிரதேசத்தில் சுற்றுலா வலயமொன்றும் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறினார்.

நாட்டில் தேர்தல் முறை குறித்து அங்கு கருத்துத் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க தற்போதைய விகிதாசார தேர்தல் முறை காரணமாக பிரச்சினைகள் பல ஏற்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். புதிய தேர்தல் முறையில் கவனம் செலுத்த வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
ஜப்பானின் நிதியுதவியின் கீழ் கண்டிப் பிரதேசத்தில் பாரிய முதலீடு .. ஜப்பானின் நிதியுதவியின் கீழ் கண்டிப் பிரதேசத்தில் பாரிய முதலீடு .. Reviewed by Madawala News on 9/04/2017 12:12:00 AM Rating: 5