Kidny

Kidny

ஜனாதிபதியினால் 'புலதிசி ராஜா' தலதா மாளிகைக்கு கையளிப்பு



மியன்மார் அரசினால் ஜனாதிபதிக்கு பரிசாக வழங்கப்பட்ட 'புலதிசி ராஜா' எனும் பெயருடைய யானைக்குட்டி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக வரலாற்றுச் சிறப்புபெற்ற தலதா மாளிகைக்கு கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வேண்டுகோளுக்கமைய, இரு நாடுகளுக்குமிடையே காணப்படும் நீண்ட கால உறவினை மேலும் பலப்படுத்தும் வகையில் கையளிக்கப்பட்டது.

 

தலதா மாளிகைக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி முதலில் வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

 

பின்னர் இடம்பெற்ற வைபவத்தின் போது யானைக்குட்டியை தலதா மாளிகைக்கு வழங்கி வைப்பதற்குரிய பத்திரம் தியவடன நிலமே நிலங்க தேலவிடம் கையளிக்கப்பட்டது.

 

இந்தியாவின் கோவா நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் – பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொண்டபோது ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவினால் மியன்மார் அரச ஆலோசனை சபை உறுப்பினரான மியன்மார் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஆங் சான் சூகியிடம்; விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த யானைக்குட்டி இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

 

எட்டு அடி உயரமான 24 வயதுடைய இந்த யானைக்குட்டியின் நிறை 3000 கிலோகிராம்கள் ஆகும். 1993 மார்ச் 04 ஆம் திகதி மியன்மாரின் தென் பகுதியில் பாகோ பிரதேசத்தில் பிடிக்கப்பட்ட இந்த யானைக்குட்டி, மியன்மாரில் பான் ஸ்சே மவுன்கே எனும் பெயருடன் காணப்பட்டது.

 

மியன்மாரிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள இந்த யானைக்குட்டி கடந்த மாதம் 18 ஆம் திகதி அதிகாலை திருகோணமலை துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள யானைகளுடன் சேர்க்கப்பட்டது.

 

அதன் பின்னர் நேற்று ஜனாதிபதியினால்;, குறித்த யானைக்குட்டி தலதா மாளிகைக்கு சம்பிரதாய பூர்வமாக கையளிக்கப்பட்டது.

 

யானைக்குட்டியை தலதா மாளிகைக்கு வழங்கி வைத்த ஜனாதிபதி அதற்கு பழங்களை உணவாக வழங்கினார்.

 

அத்துடன், குறித்த யானைக்குட்டிக்கு பொறுப்பாகவிருந்த மியன்மார் நாட்டைச் சேர்ந்த இரு யானைப் பாகர்களுக்கும் ஜனாதிபதியினால் பரிசில்கள் வழங்கப்பட்டன.

 

இந்த நிகழ்வில் அஸ்கிரிய பிரிவின் மகாநாயக்கர் வரக்காகொட ஞானரதன தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும், அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க, முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, புத்தசாசன அமைச்சின் செயலாளர் சந்ரபிரேம கமகே ஆகியோரும் தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல உள்ளிட்ட நான்கு தேவாலயங்களின் நிலமேமார்களும்; கலந்து கொண்டனர்.

 

ஜனாதிபதியினால் 'புலதிசி ராஜா' தலதா மாளிகைக்கு கையளிப்பு ஜனாதிபதியினால் 'புலதிசி ராஜா' தலதா மாளிகைக்கு கையளிப்பு Reviewed by Madawala News on 9/09/2017 09:56:00 PM Rating: 5