Kidny

Kidny

அவர்களும் இவர்களும் !



Mohamed Nizous

இலங்கை நாடு எம் நாடு
இனிய எங்கள் தாய் நாடு
இருந்தும் இங்கே ஒரு சிலபேர்
திருந்தா ஜென்மமாய் வாழ்கின்றார்

வரலாற்றில் எங்கும் கண்டது
வதைக்கும் கொடியோரை ஆதரித்து
உரையாற்றி ஆர்ப்பாட்டம் செய்வோரை,
உள்ளார் உண்ணாட்டில் சில நபர்கள்

பேசத் தெரியா பிஞ்சுகளை
பிடித்துக் கொல்லும் கொடியவரை
கூசாமல் இங்கு ஆதரிக்கும்
கொடுமையை எங்கே போய் சொல்ல

மாடு ஆடு உயிர் காக்க
மடிச்சுக் கட்டி நிற்பவர்கள்
வீடு துறந்து ஓடுபவரை
வெறியுடன் கொல்வதை சரி கண்டு

வீதியில் இறங்கி ஆதரித்து
வெற்றுக் கோஷம் இட்டபடி
மோதலை இங்கும் உருவாக்கி
கூதல் காய முனைகின்றார்

நாலு லட்சம் ஐந்து லட்சம்
நாட்டை விட்டு ஓடுவது
ஜாலியாக இருக்கிறதா
ஜாதி உள்ளே முறுக்கிறதா

நெருப்பை மூட்டும் இவர் செயலில்
நிதானம் வேண்டும் நமக்குள்ளே
வெறுப்பை இங்கு விதைப்பவரின்
பொறுப்பை இறையிடம் ஒப்படைப்போம்.
அவர்களும் இவர்களும் ! அவர்களும் இவர்களும் ! Reviewed by Madawala News on 9/18/2017 06:26:00 PM Rating: 5