Kidny

Kidny

சட்டத்தின் முன்னிலையில் சகலரையும் சமமாக அரசாங்கம் மதிக்கிறது




அரசாங்கம் சட்டத்தின் முன்னிலையில் சகலரையும் சமமாக மதிக்கிறது என்று  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வலுவான பொலிஸ் சேவையை உருவாக்க அரசாங்கம் பாடுபட்டதாகவும்  பிரதமர் கூறினார்.

பொலிஸ் திணைக்களத்தின் 151ஆவது ஆண்டு நிறைவை கொண்டாட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பிரதமர் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி பம்பலப்பிட்டியில் உள்ள பொலிஸ் களநிலை தலைமையகத் திடலில் இடம்பெற்றது. 

இதில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

அரசியல் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்று சகல இடங்களிலும் சட்டத்தை முறையாக அமுலாக்கக்கூடிய பின்புலம் உருவாக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பொலிஸ் குற்றத்தடுப்பு தொடர்பான பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் ஆலோசனை பிரிவுகளுக்கு வெளிநாட்டு ஆலோசனையாளர்களின் உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. 

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பள கொடுப்பனவுகளை அதிகரிக்க அடுத்தாண்டு இரண்டாயிரத்து 800 கோடி ரூபா ஒதுக்கப்படுமென பிரதமர் குறிப்பிட்டார்.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் உரையாற்றினார். திறமைக்காட்டிய பொலிஸ் உத்தியோகத்தர் பலருக்கும் விருதுகளும் வழங்கப்பட்டன.
சட்டத்தின் முன்னிலையில் சகலரையும் சமமாக அரசாங்கம் மதிக்கிறது சட்டத்தின் முன்னிலையில் சகலரையும் சமமாக அரசாங்கம் மதிக்கிறது Reviewed by Madawala News on 9/08/2017 01:28:00 AM Rating: 5