tg travels

சுபைர் தொடர்பில் ஜனாதிபதியிடம் அள்ளி வைத்த ஹக்கீம் ..




20 வது திருத்தம் 17 மேலதிக வாக்குகளால் கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இதற்கு எதிராக சுதந்திர கட்சியின் கூட்டணி கட்சியான தேசிய காங்கிரஸ் கடும் எதிர்ப்பு வெளியிட்டு இருந்தது .

இது தவிர சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஸுபைர் அவர்களும் 20
திருத்தம் தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிட்டதுடன் கிழக்கு முதலமைச்சார் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் ஜனாதிபதியிடம்  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைர் தொடர்பில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்தாக அறிய முடிகிறது.

கிழக்கு மாகாண சபையில் 20 க்கு ஆதரவாக நாம் செயற்பட்ட போதும் உங்களுடைய கட்சி உறுப்பினர்களே அதற்கு கடுமையாக எதிர்ப்பு வெளியிட்டதாக அமைச்சர் ஹக்கீம் அங்கு ஜனாதிபதியிடம் முறையிட்டதாக  அறிய முடிகிறது.

அமைச்சர் ஹக்கீம் பெயர் குறிப்பிடாமல் செய்த அந்த முறைப்பாடு தொடர்பில் தலையசைத்துக்கொண்டு ஜனாதிபதி கேட்டுகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படும் அதேவேளை சகல சுதந்திர கட்சி உறுப்பினர்களும் 20 ஆதரவாக வாக்களித்த அதேவேளை சுபைர் மாத்திரம் அதற்கு எதிராக வாக்களித்திருந்தார்.

குறித்த முறைப்பாடு கிழக்கு மாகாண உறுப்பினர் சுபைர் அவர்களை இலக்கு வைத்தே செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சுபைர் தொடர்பில் ஜனாதிபதியிடம் அள்ளி வைத்த ஹக்கீம் .. சுபைர் தொடர்பில் ஜனாதிபதியிடம் அள்ளி வைத்த ஹக்கீம் .. Reviewed by Madawala News on 9/13/2017 01:09:00 PM Rating: 5