Ad Space avaiable

வடக்கையும் கிழக்கையும் இணைய விடமாட்டேன் என்று யாரோடு சவால் விடுகின்றார் ஹரீஸ்....!



கைக்கு மருந்து கட்டுவதற்கு பதிலாக காலுக்கு மருந்து கட்டும் பிரதி அமைச்சர் ஹரீஸ் அவர்கள்...!

கௌரவ விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது( 26/09/17),  வடகிழக்கு இணைப்புபற்றி அரசியலமைப்பின் வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையில் வடக்கும் கிழக்கும் ஒருமாகாணமாக இணைவதற்கு இணக்கம் தெறிவித்துள்ளதாகவும், அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைதான் காரணம் என்றும் கூறி, இது விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கடுமையான எதிர்ப்பையும் தெறிவித்திருந்தார். 

வடக்கும் கிழக்கும் இணைவதற்கு நாங்கள் ஒருகாலும் அனுமதிக்கமாட்டோம், இதனை கிழக்கிலுள்ள ஒரு சமூகம் ஏற்றுக்கொள்ளாது என்றும் காரசாரமான முறையில் பாராளுமன்றத்தில் உரைநிகழ்த்தியிருந்தார். இதனை நாம் பாராட்டாமல் இருக்குமுடியாது இருந்தாலும், பி.அமைச்சர் ஹரீஸ் அவர்கள் எங்கே மருந்து கட்டுவதற்கு பதிலாக எங்கேயோ மருந்து கட்டுவது போன்றுதான் எங்களுக்கு படுகின்றது.

நாங்கள் கேட்கிறோம்... தமிழர்கள் வடக்கையும் கிழக்கையும் இணைத்துக் கேட்பதற்கோ, அல்லது தனிநாடு தாறுங்கள் என்று கேட்பதற்கோ, அல்லது சமஷ்டி தாறுங்கள் என்று கேட்பதற்கோ, அவர்களுக்கு பூரண உரிமையுள்ளது.  அவர்கள் கேட்பதை கொடுப்பதா இல்லையா என்பதை அரசாங்கம் பார்த்துக் கொள்ளும்.  
ஆனால் இவர்கள் இப்படி கேட்பதனால் நமது சமூகத்துக்கும், நமது பகுதிக்கும் என்ன பாதிப்புக்கள் ஏற்படும் என்பதை, நாமும் அரசாங்கத்துக்கு காரணகாரியங்களுடன் விளங்கப்படுத்தி அவர்கள் மூலமாகவே அதற்கான தீர்வையும் பெறவேண்டும் என்பதே நியதியாகும்.

இந்த விடயமாக அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவொன்று அமைக்கப்பட்டு அதற்கு பிரதமர் ரணில் தலைவராகவும், இன்னும் பலபேருடன்  ஹக்கீம், ரிசாட் போன்றவர்களும் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். 

அந்த குழுவிடம் உங்கள் கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் வடகிழக்கு சம்பந்தமாக என்ன கருத்தை முன்வைத்தார்கள் என்பது தெளிவில்லாமல் இருக்கின்றது.

அப்படி நாங்கள் அறிக்கை சமர்ப்பித்தோம் அதனை இடைக்கால அறிக்கையில் சேர்க்க மறுத்துவிட்டார்கள் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும், நீங்கள் அந்த அறிக்கையை கணக்கில் எடுக்காத அந்த குழுவின் தலைவர் ரணில் அவர்களைத்தானே எதிர்த்து கேள்விகேட்க வேண்டும். அதே போன்று இந்தக்கோரிக்கையை வழுவாகவைத்து தீர்வு தேடாத உங்கள் கட்சித் தலைவரைத்தானே நீங்கள் கேள்வி கேட்கவேண்டும்.
அதனை விட்டு விட்டு தங்களுக்கு இதுதான் வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பை கண்டித்து பேசுவது எந்த விதத்தில் நியாயமாகப்படும் என்று தெறியவில்லை.

ஆக, நீங்களோ உங்களுது கட்சியோ இதனைப்பற்றி ஒரு அறிக்கையும் அந்த குழுவுக்கு வைக்கவில்லை என்பதுதான் உண்மை.  ஆனால் அவர்கள் கோரிக்கை வைத்து அதனை இடைக்கால அறிக்கையில் இடம்பெற வைத்துள்ளார்கள். அது அவர்களின் உரிமை ஆனால் நீங்கள் விடிய விடிய தூங்கிவிட்டு, விடிந்து எழும்பி  இதனை  நடக்கவிடமாட்டேன் என்று சவால் விடுவது அவ்வளவு ஏற்புடைய செயலாக படவில்லை என்பதே எங்கள் கருத்தாகும்.

ஆக சம்பந்தன் ஐயாவுடன் மிக நெருக்கமான உறவைப்பேணிவரும் மு.காங்கிரஸ் தலைவர் ரஹுப் ஹக்கீம் அவர்கள் இந்த விடயம் சம்பந்தமாக உங்களைப்போல் அர்த்தம் திர்த்தமாக எந்த இடத்திலும் பேசவில்லை என்பதையும் நீங்களும் நாங்களும் அறிவோம். 

நிலைமை இப்படியிருக்கும்போது நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை கண்டிக்க முற்படுவது ஆச்சரியமாக உள்ளது.
ஆகவே மக்களை எந்தநாளும் முட்டாளாக்கலாம் என்று நினைப்பதை விட முட்டாள்தனம் வேறொன்றும் இருக்கமுடியாது. இந்த வடகிழக்கு இணைப்பு விடயத்தில் உங்கள் சாணக்கிய தலைமை வேறு திட்டத்தோடு பயணிக்கின்றது என்பதை நீங்கள் அறியாமல், உங்களின் மனஆதங்கத்தை வேறொருவரிடம் காட்ட முனைவது வெற்றியைத் தறுவதற்கு பதிலாக தோல்விக்குத்தான் வழிவகுக்கும் என்பதே எங்களின் கருத்தாகும்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை..

வடக்கையும் கிழக்கையும் இணைய விடமாட்டேன் என்று யாரோடு சவால் விடுகின்றார் ஹரீஸ்....! வடக்கையும் கிழக்கையும் இணைய விடமாட்டேன் என்று யாரோடு சவால் விடுகின்றார் ஹரீஸ்....! Reviewed by Madawala News on 9/28/2017 01:07:00 AM Rating: 5