Ad Space Available here

மெல்லக் கொல்லும் நல்லாட்சிஇன்று நல்லாட்சி அரசாங்கம் சிறுபான்மை மக்களை அமைதியாக நசுக்கி கொண்டிருப்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. அந்த
வகையில் அன்மையில் கொண்டுவரப்பட்ட 20வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் இதனையே வெளிப்படுத்தி இருந்தது. இச்சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பினை சபாநாயகருக்கு அனுப்பி இருந்தது. எனினும் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் மற்றுமொரு சட்டமூலம் கொண்டுவரப்பட இருக்கிறது.

இதில் நமது சமூகத்திற்கு இருக்கும் நன்மை என்ன? என்ற கேள்விக்கு இன்னும் முழுமையான விடை கிடைக்க வில்லை. இருந்தும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் தெளிவான மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிப்பதென ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர், தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் அன்மையில் ஊடலவியலாளர் மாநாட்டினை நடத்தி இதில் இருக்கும் பாதகங்களையும், திறைமறைவில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளபடும், பட இருக்கும் நாசகார விடயங்களையும் சுட்டி காட்டி இருந்தார்.

எனினும் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அல்லது அதன் சார்பானவர்களால் இதுவரை எவ்வித மறுப்பறிவித்தலோ, அவர்களது முன்மொழிவுகளையோ அரசுக்கோ அல்லது மக்களுக்கோ தெரிவிக்க வில்லை. மாறாக 20க்கு எதிராக அட்டாளைச்சேனையில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது முஸ்லிம் காங்கிரசின் மாகாண சுகாதார அமைச்சர் ஆர்ப்பாட்ட கார்களின் கையில் இருந்த பதாதையை பறிக்க முற்பட்டதுடன் தடையயும் ஏற்படுத்த முயற்சித்தார்.

எனினும் முஸ்லிம்களுக்கென்று உரிமைக்காக உருவாக்கப்பட்ட கட்சியின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரஃப் அவர்களின் நினைவுதினத்தில் கடமை கழிக்கும் நிகழ்வாக ஒன்று கூடல்களை நடாத்திவிட்டி சொந்த கதை, சோக கதைகளை கூறிவிட்டு பிரிந்து சென்று விட்டனர். முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால அனுகுமுறைகள், தேவைப்பாடுகள், பிரச்சினைகள் தொடர்பில் காத்திரமான விடயங்கள் பேசப்படவில்லை என்பது கவலை தரும் விடயம்.

இவ்வாறான நிலையில் மீண்டும் ஒரு 20வது திருத்தத்தினை அரசு கொண்டுவர முயற்சிக்கின்றது அதாவது தேர்தல் முறைமையில் மாற்றத்தினை ஏற்படுத்தி கலப்பு முறைமையை உள்வாங்குவதனூடாக இலங்கையில் ஏற்படுத்தப்படுகின்ற ஆட்சிகள் சிறுபான்மை சமூகத்தினால் தீர்மானிக்கபடாத வண்ணமும் அவர்களில் தங்கி இருக்கக் கூடாது என்ற மேற்குலகின் ஆலோசனைகளை இவ்வரசாங்கம் ஏற்று இவற்றை நடைமுறைப்படுத்த முஸ்தீபுகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இவற்றை எல்லாம் பேசவேண்டிய தலைமைகள் பேசாமல் இருப்பதுடன், போசக்கூடியவகளான முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ், பஸீர் சேகுதாவூத், ஹஸன் அலி, மற்றும் அன்சில், சம்மாந்துறை நௌசாத், தாஹீர், ஜெமீல், நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் தலைவர் சகோதரர் அப்துல் ரஹ்மான், முன்னாள் முதல்வர் நஜீப் A மஜீட் போன்றவர்கள் வெளியில் உள்ளனர். இவர்கள் தொடர்ந்தும் இவ்வாறு இருக்க முடியாது எதிர் கால சந்ததியினருக்கு சிறந்த, நாகரீகமான அரசியல் பாதயை காட்ட வேண்டும் அதற்காக இந்த பொருத்தமான கால கட்டத்தில் அரசியல், கட்சிகள் வேறுபாட்டினை மறந்து ஒரு அமைப்பின் கீழ் ஒன்றினைந்து சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டல்களை மேற்கொள்ள வேண்டும்.

"கிழக்கிற்கு தெளிவூட்டல்" எனும் தலைப்பில்  ஜம்மியத்துல் உலமாசபை, ஏனைய சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகள் போன்றவர்கள் முன்வந்து, மேற்சொன்ன அரசியல் தலைமைகள் அனைவரையும் ஒன்றினைத்து கொழும்பில் ஊடக சந்திப்பினை நடாத்தி அதன் பின் "கிழக்கு மக்கள் அமையம்" அல்லது SLRF அமைப்பினுடாக கிழக்கு முழுவதும் மக்களுக்கு தெளிவூட்டல்களை மேற்கொண்டு நமது சமூகத்தின் இருப்பை உறுதி செய்யுமாறு இளைஞ்சர்கள் சார்பில்  ஜம்மியத்துல் உலமாசபை, ஏனைய சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகளிடமும் கேட்டுக்கொள்வதுடன் இவற்றிக்கு முழு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு
மூத்த அரசியல் வாதிகளையும் மிகவும் வினையமாக வேண்டிக்கொள்கின்றேன்.

இந்த சந்தர்ப்பத்தினை நழுவவிட்டால் நம் இருப்பு கிழக்கில் கேள்விக்குரியாக்கப்படும் என்பது திண்ணம்.

சமூகப் பணியில்.
எஸ்.எல். எம். ஷாபி சுலைமான்,
முன்னாள் இளைஞர் பாராளுமன்ற ஊடக மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சர்.
நிந்தவூர்
மெல்லக் கொல்லும் நல்லாட்சி  மெல்லக் கொல்லும் நல்லாட்சி Reviewed by Madawala News on 9/19/2017 09:10:00 PM Rating: 5