Ad Space Available here

முன்னெப்போதும் இல்லாத அரசியல் அனுபவத்தை மக்கள் பெற்றார்கள்இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்தை புரிந்துணர்வுடன் வலுவாக முன்னெடுத்துச் செல்லப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
              
யார் என்ன சொன்னாலும் இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் இரண்டரை வருட கால பயணம் மிகவும் வெற்றிகரமானதாக அமைந்திருந்ததென்றும் ஜனாதிபதி கூறினார்.
 
வலுவான பொருளாதாரத்தை உருவாக்கும் நோக்கில் இரு பிரதான கட்சிகள் இணைந்து உருவாக்கிய அரசாங்கம் இலங்கையை செல்வந்த நாடாக மாற்றும் நோக்கில் அடுத்துவரும் எட்டுவருடங்களுக்கான  Vision 2025 என்ற கொள்கையை வகுத்துள்ளது. இதனை வெளியிட்டு வைக்கும் வைபவம் இன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
 
வழமையாக இவ்வாறான வைபவம் போது ஜனாதிபதி , பிரதமர் ஆகியோரின் உரையுடன் ஆரம்பமாவது வழமை. ஆனால் இன்றைய நிகழ்வின் போது அவ்வாறு எதுவும் இடம்பெற வில்லை.மண்டபத்தில் கூடியிருந்த இளைஞர்கள் யுவதிகளின் கேள்விகளுக்கு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதிலளித்தனர்.இதன் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
 
எதிர்காலத்தை பொறுப்பேற்கவுள்ள இளம் சமூகத்தினரான இந்த இளைஞர்கள் யுவதிகளிடம் இரு பிரதான கட்சிகள் இணைந்து உருவாக்கிய அரசாங்கம் இலங்கையை செல்வந்த நாடாக மாற்றும் நோக்கில் அடுத்துவரும் எட்டுவருடங்களுக்காகன  V-Twenty-Twenty-fiv  என்ற கொள்கை ஆவணததை  முதலில்  ஜனாதிபதியும் பிரதமரும் கையளித்தனர். இதனைத்தொடந்து இந்த வைபவம் ஆரம்பமானது.  
 
இணக்கப்பாட்டு அரசாங்கத்தை உருவாக்கியதன் மூலம் முன்னெப்போதும் இல்லாத அரசியல் அனுபவத்தை மக்கள் பெற்றார்கள்  என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
 
தேச நலன்கருதி இணக்கப்பாட்டு அரசாங்கத்தை உருவாக்கியதாக அவர் கூறினார். 

அரசாங்கம் கடந்து வந்த பாதையில் எத்தகைய விமர்சனங்களும், குற்றச்சாட்டுக்களும், ஆட்சேபனைகளும் முன்வைக்கப்பட்டாலும், அந்தப் பயணத்தை மக்களுக்காக தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியுள்ளதென ஜனாதிபதி குறிப்பிட்டார். 

எதிர்காலத்தில் இணக்கப்பாட்டு அரசாங்கத்தின் பயணத்தை புரிந்துணர்வோடு முன்னெடுத்துச் சென்று மக்களுக்கான பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றப் போவதாகவும் அவர் கூறினார்.
 
இளைஞர் பாராளுமன்றத்தைச் சேர்ந்த மட்டக்களப்பு பெண் பிரதிநிதி தமிழில் முன்வைத்த  கேள்விக்கும் ஜனாதிபதி பதிலளித்தார்.
 
சர்வதேச மட்டத்தில் கிடைக்கக்கூடிய உதவிகள் கடந்த இரண்டு வருடங்களில் தான் கிடைத்தன. இதற்குக் காரணம் அரசாங்கத்தின் சரியான வேலைத்திட்டம் தான். முன்னைய அரசாங்கத்தின் தவறுகள் காரணமாக இந்த உதவிகள் கிடைக்காமல் போயிருந்தன. நாம் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் ஐநா சாசனத்திற்கு அமைய செயற்படுவது கட்டாயமாகிறது. அங்கத்துவ நாடாக இருப்பதால் ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள், ஊடக சுதந்திரம் ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டியிருக்கிறது. அவ்வாறு வலுப்படுத்தவது சமூகத்திற்கு சிறந்ததாகும். இவை நாட்டிற்குள் ஸ்தாபிக்கப்படும் போது சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையும் உதவிகளும் உறுதிப்படுத்தப்படுகின்றன. ஊடகவியலாளர்கள் உண்மையை எழுத முடியாவிட்டால், வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வார்களானால், ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவார்களானால், ஊடக நிறுவனங்கள் தீயிட்டு கொழுத்தப்படுமானால் அது நாட்டிற்கு நல்லதல்ல என்றும் கூறினார்.

நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்துக்காகவே கூட்டரசாங்கத்தை உருவாக்கி இதற்கு முன்னர் எவரும் கண்டிராத புதிய அரசியல் அனுபவத்தை நாட்டுக்கு வழங்கியதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அறுபது ஆண்டுகளுக்கு கூடுதலான காலம் எதிராக இருந்த நாட்டின் முதன்மையான கட்சிகள் இரண்டையும் இணைத்து உருவாக்கப்பட்ட கூட்டரசாங்கத்தின் பெறுபேறுகள் மிக குறுகிய காலத்தினுள் நூறு வீதம் வெற்றிபெறாவிட்டாலும் ஒழுக்கத்துடனும், மனமுதிர்வுடனும் செயற்பட்டு,அந்த சவால்மிக்க பொறுப்பை நிறைவேற்றுவதற்கு கடந்த இரண்டரை ஆண்டுகளில் அனைவராலும் முடிந்துள்தாகவும் ஜனாதிபதி  தெரிவித்தார்.

எதிர்வரும் காலத்திலும் கூட்டரசாங்கத்தின் பயணம் சிறந்த புரிந்துணர்வுடன் பலமாக முன்னோக்கி பயணித்து நாட்டுக்கும் மக்களுக்குமான பொறுப்புக்களை குறைவின்றி நிறைவேற்றப்படுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்து வருவதாக பிரதம மந்திரி வலியுறுத்தியுள்ளார்.
               
பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வியொன்றுக்க பதிலளிக்கையில் நாட்டை பாரிய அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது 

பொருளாதாரம் வலுவடைந்து வருகிறது. அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்ற சமயம் நாடு மிகப்பெரிய கடன் பழுவை எதிர்கொண்டது. இன்று முதலீடுகள் பெருகுகின்றன. இதன் மூலம் தொழில்சந்தை வலுவடையும் என்ற நம்பிக்கை எழுந்தள்ளது. இலங்கை வர்த்தகர்கள் சர்வதேச சந்தையில் பிரவேசிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறதென பிரதமர் குறிப்பிட்டார்.

2025ம் ஆண்டளவில் நாட்டிற்குள் பொதுவான பொருளாதாரத்தை வலுப்படுத்தவது அரசாங்கத்தின் அபிலாஷையாகும். அந்தக் காலப்பகுதிக்குள் வருமானம் பெருமளவு அதிகரித்து அந்நியச் செலாவணி உயரக்கூடும். வரவு செலவு ஏற்றத்தாழ்வுகளை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அணிசாராக் கொள்கை பாதுகாக்கப்படுமென பிரதமர் சுட்டிக்காட்டினார்.

முன்னெப்போதும் இல்லாத அரசியல் அனுபவத்தை மக்கள் பெற்றார்கள் முன்னெப்போதும் இல்லாத அரசியல் அனுபவத்தை மக்கள் பெற்றார்கள் Reviewed by Madawala News on 9/05/2017 12:07:00 PM Rating: 5