Kidny

Kidny

அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தால் வடகொரியாவுக்கு சோகமான நாளாக அமையும்: டிரம்ப் எச்சரிக்கை




அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தால் வடகொரியாவுக்கு சோகமான நாளாக அமையும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எந்த சட்ட திட்டத்துக்கும் கட்டுப்படாமல், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பொருளாதார தடைகளை பொருட்படுத்தாமல், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளிலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளிலும் ஈடுபட்டு அடாவடி செய்து வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் அணு ஆயுதங்களை சோதித்து வருகிற அந்த நாடு, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அதிரடியாக 6-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியது. 

அந்த நாட்டின், கில்ஜூ கவுண்டியில் நடத்தப்பட்ட இந்த அணுகுண்டு சோதனை, ஹைட்ரஜன் குண்டு சோதனை ஆகும். இது கடந்த ஆண்டு நடத்திய சோதனையை விட அதிக ஆற்றல் வாய்ந்தது. இந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை உலக அரங்கை அதிர வைத்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகள் வடகொரியாவின் ஹைட்ரஜன் குண்டு சோதனைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. வடகொரியா போருக்கு வரிந்து கட்டிக்கொண்டு நிற்பதாக அமெரிக்கா கடந்த சில தினங்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்தது. 

இந்த நிலையில்,  அமெரிக்கா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் அது வடகொரியாவுக்கான சோக நாளாக அமையும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். டொனால்டு டிரம்ப் இது பற்றி கூறுகையில், வடகொரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைக்கு நான் முன்னுரிமை அளிக்க மாட்டேன். 

ஆனால், ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால்,  வடகொரியாவின் தலைமைக்கு மிகவும் சோகமான நாளாக அது அமையும். வடகொரியா மிகவும் மோசமாக நடந்து கொள்வதாகவும், உடனே இத்தகைய செயலை அந்நாடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறிய டிரம்ப்,வடகொரியாவுக்கு எதிராக மேலும் பொருளாதார தடைகள் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். 


அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தால் வடகொரியாவுக்கு சோகமான நாளாக அமையும்: டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தால் வடகொரியாவுக்கு சோகமான நாளாக அமையும்: டிரம்ப் எச்சரிக்கை Reviewed by Madawala News on 9/08/2017 11:26:00 AM Rating: 5