tg travels

தேர்தலை நடத்துங்கள் நாம் தக்க பதிலடி தருகிறோம்




ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எப்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்ததோ அப்போதே மாற்று கட்சிக்கான தேவை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

ஹக்மன பிரதேசத்தில் இடம்பெற்ற  நிகழ்வொன்றில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துக்கு வெளியிட்ட அவர் ..

அரசாங்கத்தை வீழ்த்தும் பலமான மாற்று அணியொன்று உருவாவதை எவராலும் தடுக்க முடியாது.நாட்டை தனியார் மயப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை தெளிவாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஊள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துங்கள் நாம் தக்க  பதிலடி தருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.


தேர்தலை நடத்துங்கள் நாம் தக்க பதிலடி தருகிறோம் தேர்தலை நடத்துங்கள் நாம் தக்க  பதிலடி தருகிறோம் Reviewed by Madawala News on 9/05/2017 08:11:00 PM Rating: 5