Kidny

Kidny

முஸ்லிம் காங்கிரஸ் சிறுபான்மை மக்களுக்காக வழங்கப்பட்ட மாகாண சபைகளின் அதிகாரங்களை தாரைவார்ப்பதற்கு முயற்சி



றியாஸ் ஆதம்

அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரிவட கிழக்கு தமிழ் இளைஞர்கள் கடந்த 30 வருடகாலமாக ஆயுதம் ஏந்தி போராடினார்கள். வடக்குகிழக்கு மாகாணங்களில்  வாழ்கின்ற மக்களின்நலனுக்காக தற்காலிக  தீர்வாக 1987ஆம் ஆண்டுஇலங்கை - இந்திய ஒப்பந்;தம் கைச்சாத்திடப்பட்டுஅதனூடாக நமது நாட்டிலே மாகாண சபைமுறைமை கொண்டு வரப்பட்டது.

 13வது திருத்த சட்டத்தினூடாக மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைகிழக்கு மாகாண முதலமைச்சர்பதவிகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் மத்தியஅரசாங்கத்திடம் வழங்குவதற்கு தீவிர முயற்சிகளைமேற்கொண்டு வருகின்றார் என கிழக்கு மாகாணஎதிர்க்கட்சித் தலைவரும், அம்பாறை மாவட்டஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பைதெரிவித்தார்.

 

“காலம் கழியும் உண்மை ஒளிறும்” என்ற தலைப்பில்சம்மாந்துறை பிரதான வீதியில் தேசியகாங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர்அமைப்பாளர் சட்டத்தரணி ஆஸிக் அவர்களின்தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்…

 

பெரும் தலைவர் எம்;.எச்.எம்.அஷ்ரப் அவர்கள்அன்று பேரினவாத கட்சிகளுக்கு ஆதரவு வழங்கிக்கொண்டிருந்த முஸ்லிம் மக்களை சிறிலங்காமுஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியின் கீழ்ஒற்றுமைப்பட்டு இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்மக்களின் அரசியல் விடுதலை பயணத்தைமேற்கொண்டார்.

தலைவர் அஷ்ரப் அவர்களுடைய அரசியல்விடுதலை பயணத்தை இல்லாமல் செய்வதற்குஅன்று ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில்அமைச்சர்களாக இருந்தவர்கள் பாரியமுயற்சிகளை மேற்கொண்டார்கள். பலசந்தர்ப்பங்களில் தலைவர் அஷ்ரப் அவர்கள் பேசிக்கொண்டிருந்த மேடைகளை நோக்கி துப்பாக்கிவேட்டுக்களையும் மேற்கொண்டனர். இச்சந்தர்ப்பத்தில் தலைவர் அஷ்ரப் அவர்களைமுஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் தங்களதுஉயிர்களை துச்சமென மதித்து தலைவர் அஷ்ரப்அவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில்ஈடுபட்டனர்.

 

இலங்கை அரசியலில் தேர்தல் காலங்களில்மாத்திரம் கரிவேப்பிலையாக பாவிக்கப்பட்டமுஸ்லிம் சமூகம் தலைவர் அஷ்ரப் அவர்களுடையஅரசியல் பயணத்தின் காரணமாக நமது நாட்டில்ஜனாதிபதிகளை தெரிவு செய்வதற்கும், ஆட்சிமாற்றங்கள் ஏற்படுவதற்கும் முஸ்லிம் சமூகம் பேரம்பேசும் சக்தியாக மாற்றப்பட்டது.

 

முஸ்லிம்களின் அரசியல் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் குர்ஆன், ஹதீஸ் என்பவைகளையாப்பாகக் கொண்டு உருவாக்கப்பட்ட முஸ்லிம்காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிழக்கு மாகாணமுதலமைச்சர், தமிழ் பேசும் மக்களுக்காகவழங்கப்பட்டுள்ள மாகாண சபைகளின்அதிகாரங்களை வேரோடு அறுத்து மத்தியஅரசாங்கத்திற்கு வழங்குவதற்கு பகிரங்கமாகவேசெயல்படுவது குறித்து கிழக்கு மாகாண முஸ்லிம்மக்கள் கவலைப்பட வேண்டியுள்ளது.

 

நமது நாட்டில் அமைந்துள்ள சிங்கள மக்கள்பெரும்பான்மையாக வாழும் ஊவா மாகாணசபையும், தென் மாகாண சபையும் 20வதுதிருத்தத்தை தோற்கடித்துள்ளது, வட மாகாணசபை 20வது திருத்தத்தை நிராகரித்துள்ளது, மேல்மாகாண சபையும், சப்ரகமுவ மாகாண சபையும்20வது திருத்தத்தை ஒத்திவைத்துள்ள நிலையில்கிழக்கு மாகாண சபை இந்த சட்ட மூலத்தைஇதுவரை நிராகரிக்காமல் இருப்பது குறித்துகிழக்கு மாகாண மக்கள் கவலையடைகின்றனர்.

 

கிழக்கு மாகாண சபையில் அங்கம் பெரும் அரசியல்கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேசியகாங்கிரஸ், வுஆஏ கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய கட்சிகள் 20வது திருத்த சட்ட மூலம்திருத்தப்படாத நிலையில் கிழக்கு மாகாணசபையில் சமர்ப்பிக்கப்பட்டால் இச்சட்டமூலத்தினை கிழக்கு மாகாண சபையில்தோற்கடிப்போம் என பகிரங்கமாக தெரிவித்தபோதும் ஐக்கிய தேசியக் கட்சியும், கிழக்குமுதலமைச்சரும் இணைந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவு இல்லாமல் கிழக்குமாகாண சபையில் 20வது திருத்த சட்டத்தைசபையில் சமர்ப்பித்து இச்சட்ட மூலத்தை வெற்றிபெறுவதற்கு பல வழிகளிலும் முயற்சிகளைமேற்கொண்டது குறித்து நாம் பெரும் ஆச்சரியம்அடைந்தோம். கிழக்கு மாகாண சபையில்நல்லாட்சி நடைபெறுவதாக கூறி கடந்த 02வருடகாலமாக கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள உறவுகள் சீரழிக்கப்பட்டுள்ளன.

 

கிழக்கு மாகாண சபையில் தமிழ் மக்களுக்குநீதியும், நியாயமும் முறையாக கிடைக்கவில்லைஎனவும் கிழக்கு மாகாண சபையின்நடவடிக்கைகளால் தமிழ், முஸ்லிம் உறவுகள்சீர்கெட்டு போவதாகவும் இந்த விடயம் தொடர்பாகதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்இரா.சம்பந்தனுக்கும், முஸ்லிம் காங்கிரஸின்தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இன்னும் விளங்காமல்உள்ளதாக அன்மையில் கிழக்கு மாகாணத்திற்குவிஜயம் செய்த அமைச்சர் மணோகனேசன்அவர்கள் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

 

கிழக்கு மாகாண சபையின் வரலாற்றில் 2008ல்இருந்து 2015 வரையிலான காலப்பகுதியில்கிழக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டஅபிவிருத்தி நடவடிக்கைகளால் சமூகங்களுக்குஇடையிலே நிலவிய இனவாத சிந்தனையைஇல்லாமல் செய்து கிழக்கு மாகாண மக்கள்ஐக்கியமாக வாழக்கூடிய செயற்பாடுகளைமேற்கொண்டிருந்தோம். 2015ல் இருந்து2017வரை கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்டமாகாண சபை நிருவாகத்தினால் அர்ப்பணிப்போடுஉருவாக்கப்பட்ட இன ஐக்கியம் இல்லாமல்செய்யப்பட்டு இன்று பகிரங்கமாகவே மக்கள்பிரதிநிதிகள் கிழக்கு மாகாண சபையில் இனவிகிதாசாரம் பேணப்படவில்லை என தெரிவிக்கும்நிலைமை உருவாகி உள்ளது எனத் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் சிறுபான்மை மக்களுக்காக வழங்கப்பட்ட மாகாண சபைகளின் அதிகாரங்களை தாரைவார்ப்பதற்கு முயற்சி முஸ்லிம் காங்கிரஸ் சிறுபான்மை மக்களுக்காக வழங்கப்பட்ட மாகாண சபைகளின் அதிகாரங்களை தாரைவார்ப்பதற்கு முயற்சி Reviewed by Madawala News on 9/11/2017 01:05:00 AM Rating: 5