tg travels

20 சாத்தியமில்லை ! தேர்தலை சந்திக்க தயாராகிறது UNP




நவம்பர் மாதத்தில் மூன்று உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறு பிரதமர் ரனில் விக்ரமசிங்க  ஐக்கிய தேசிய கட்சியின் சீர்த்திருந்த குழுவின் உயர்மட்ட கலந்துரையாடலில் அக்குழு முக்கியஸ்தர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அறியமுடிகிறது.

நேற்று அலறிமாளிகையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் சீர்த்திருந்த குழுவின் முக்கியஸ்தர்கள் பிரதமரை சந்தித்த போது இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தல்களை பிற்போடுவதற்கான சாத்திய கூறுகள் அருகி வருவதால் அநேகமான நவம்பர் மாதம் மூன்று மாகாண சபைகளின் தேர்தல் நடைபெறும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக குறித்த கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதேவேளை தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறு பிரதமர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

20ம்திருத்த சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை பாராளுமன்ற மூன்றில் இரண்டும் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி மக்கள் ஆணையை பெறாமல் தேர்தலை மாகாண சபை தேர்தலை பிற்போட முடியாது என நீதிமன்றம் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அறிவித்துள்ளதாக பத்திரிகை ஒன்று நேற்று தகவல் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் தொகுதி அமைப்பாளர்கள் பதவி இல்லாத ஐக்கிய தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதிகள் பொறுப்பளிப்பதுடன் கட்சியின் தேர்தலுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ள இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


20 சாத்தியமில்லை ! தேர்தலை சந்திக்க தயாராகிறது UNP  20 சாத்தியமில்லை ! தேர்தலை சந்திக்க தயாராகிறது UNP Reviewed by Madawala News on 9/16/2017 11:56:00 AM Rating: 5