Kidny

Kidny

பேருவளை இளைஞர் அமைப்பாளர் மு காவிற்கு சவால் ..



ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேருவளை பிரதேச சபையில் தமது இயலாமையை மூடி மறைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட நினைப்பது கீழ்த்தரமான செயலாகும் என ஐக்கிய தேசியக் கட்சி தேசிய இளைஞர் முன்னணியின் பேருவளை அமைப்பாளர் ஹுனைப் எம் ஹனீப் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேருவளை பிரதேச சபையில் தமது இயலாமையை மூடி மறைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட நினைப்பது கீழ்த்தரமான செயலாகும்.அவ்வாறு தனித்து போட்டியிட்டு உறுப்பினரை வென்றெடுக்க முடியவில்லை என்றால் அவ்வாறான பேருவளை போன்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில்  ஒரு கட்சியை இயக்குவதில் என்ன பயன்?  

தர்கா நகரிலிருந்து 2010 தொடக்கம் 2015 வரை பாராளுமன்ற உறுப்பினரை கொண்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு பேருவளை பிரதேச சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு உறுப்பினரை வென்றெடுக்கும் சக்தி இல்லை என்பதோடு அந்தக் கட்சியின் இயலாமையையும் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாமையையும் தெளிவாக காட்டுகிறது. 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டிணைந்து போட்டியிட்ட போதிலும் அதற்கு முன்னதாக 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்தே போட்டியிட்டது, அதுவும் தர்கா நகரில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பிரதேச சபை உறுப்பினரை காங்கிரஸில் இறக்கி படுதோல்வி அடைந்தது. 

ஐந்து வருடங்கள் அரச தரப்பில் பாராளுமன்ற உறுப்பினராக அதற்கு முன்னர் மாகாண சபை உறுப்பினராக மற்றும் பிரதேச சபை உப தலைவராக தர்கா நகரைச் சேர்ந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொருளாளரின் தொகுதியில் அக் கட்சிக்கு பிரதேச சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு உறுப்பினரை வெல்ல முடியாது என்றால் இவர்கள் இவ்வளவு காலமும் என்ன புடுங்கினார்கள் என்பது தெளிவாகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மீது பொழிகின்ற மழையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நனைய நினைப்பது காலந்தொட்டு நடைபெறுகிது. 

வெறும் கட்சித் தலைவர்களுடன் உள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டிணைந்து போட்டியிடுவதாக நொண்டி காரணங்களை காட்டி நழுவிச் செல்லாமல் முடிந்தால் பேருவளை பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு ஒரு உறுப்பினரையாவது வென்று காட்டுமாறு அக்கட்சியின் தலைமைக்கும் தர்கா நகரில் ஆணவம் காட்டும் காங்கிரஸ் வாதிகளுக்கும் பகிரங்க சவால் விடுகிறேன்.

ஹுனைப் எம் ஹனீப்
இணைப்பாளர் - பேருவளை
தேசிய இளைஞர் முன்னணி 
(ஐக்கிய தேசியக் கட்சி)
15.09.2017.
பேருவளை இளைஞர் அமைப்பாளர் மு காவிற்கு சவால் .. பேருவளை இளைஞர் அமைப்பாளர் மு காவிற்கு சவால் .. Reviewed by Madawala News on 9/15/2017 05:14:00 PM Rating: 5