Kidny

Kidny

கட்சி, நிறம் என்ற வேறுபாடின்றி கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொலன்னறுவை மக்கள் எனக்கு வாக்களித்தனர்




பயிர்ச்செய்யப்படாத அனைத்து தனியார் காணிகளையும் பயிர்ச்செய்வோருக்காக வழங்குவதற்கு தற்போதுள்ள சட்டதிட்டங்களின் கீழ் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
 

வறட்சியினால் அழிவுக்குள்ளான பயிர்நிலங்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவந்து உணவு உற்பத்தியை மேம்படுத்துவதற்கு அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்த தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
 

திம்புலாகலை புதிய பிரதேச சபை கட்டிடத்தை இன்று (09) பிற்பகல் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். 
இந்த பயிர்ச்செய்கை நிகழ்ச்சித்திட்டத்திற்கு அரசாங்கத்தின் அனைத்து காணிகளும் பயன்படுத்தப்படவுள்ளதுடன், பயிர்ச்செய்கைக்கு உட்படுத்பபடாமலுள்ள அனைத்து தனியார் காணிகளிலிலும் கட்டாயமாக பயிர்ச்செய்னை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சட்டமியற்றப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி 
குறிப்பிட்டார்.
 

நாட்டு மக்களை வறுமையிலிருந்து விடுவித்து நாட்டின் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தி, நாளைய தலைமுறைக்கு சுபீட்சமான ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே இந்த அனைத்து தீர்மானங்களும் மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
 

கல்வி, சுகாதாரம், சமூக நலன்பேணல் ஆகிய அனைத்து துறைகளிலும் நாட்டில் சமமான அபிவிருத்தியை முன்னெடுப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அபிவிருத்தியின் பலன்கள் அனைவருக்கும் கிடைக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவம் கூறினார். 
 
 
அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களிலும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் பிரச்சினைகளைப் பார்த்து அப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதை நோக்கமாக செயல்பட்டுவருவதாக தெரிவித்த இதில் எந்த கட்சி என்று கேட்கும் கொள்கை தம்மிடம் கிடையாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

கட்சி, நிறம் என்ற வேறுபாடின்றி கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொலன்னறுவை மக்கள் தனக்கு வாக்களித்தனர் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பொலன்னறுவையில் மட்டுமன்றி நாட்டின் அனைவருக்கும் அரசியல் பேதங்களின்றி அபிவிருத்தியின் நன்மைகளை கிடைக்கச்செய்வதாகவும் தெரிவித்தார்.
 

இன்று ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்களைப்பார்த்துக்கொண்டிருக்காது அரசாங்கம் என்ற வகையில் தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
 

கிராமிய நிர்வாக நடவடிக்கைகளை பலமாகவும் வினைத்திறன்மிக்கவகையிலும் நிறைவேற்றும் நோக்குடன் வடமத்திய மாகாண சபையினால் 70 லட்சம் ரூபா செலவில் அனைத்து வசதிகளுடனும் இந்த பிரதேச சபை அலுவலகக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
 

இன்று பிற்பகல் பிரதேச சபை வளாகத்திற்கு சென்ற ஜனாதிபதி, முதலில் அங்குள்ள பௌத்த நிலையத்திற்கு சென்று சமய கிரியைகளில் கலந்துகொண்ட பின்னர் நினைவு படிகத்தை திரைநீக்கம் செய்து புதிய கட்டிடத்தை மக்களிடம் கையளித்தார். பிரதேச சபை வளாகத்தில் ஜனாதிபதி ஒரு நாக மரக்கன்றையும் நாட்டினார்.
 

சங்கைக்குரிய வில்லானே சிரியாலங்கார நாயக தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிகார, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன, வடமத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஜயந்த மாரசிங்க, என்.ஏ சம்பத், எச்.எம் அன்சார் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கட்சி, நிறம் என்ற வேறுபாடின்றி கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொலன்னறுவை மக்கள் எனக்கு வாக்களித்தனர்  கட்சி, நிறம் என்ற வேறுபாடின்றி கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொலன்னறுவை மக்கள் எனக்கு வாக்களித்தனர் Reviewed by Madawala News on 9/09/2017 10:18:00 PM Rating: 5