Kidny

Kidny

ஷபீக் மெளலவி அவர்களுக்கு லண்டனில் பிரியாவிடை


 
                                        
ஐக்கிய இராஜ்ஜியத்தில் கடந்த ஆறரை வருட காலமாக வசித்து விட்டு இலங்கை வர தயாராகி கொண்டிருக்கும் அஷ் ஷெய்க், அல் ஹாபிள் ஷபீக் மெளலவி அவர்களுக்கு தெற்கு லண்டனின் க்ரொய்டன் நகரில் அமைய பெற்றுள்ள அல் ஹிதாயா இஸ்லாமிய மத்திய நிலையத்தினால் மிக சிறப்பான பிரியாவிடை கூட்டமொன்று கடந்த வாரம் நடாத்த பட்டது.               

 

ஐக்கிய இராஜ்ஜியத்தின் லண்டன் மாநகரின் பல பகுதிகளிலும் லண்டனிற்கு வெளியே  பல பகுதிகளிலும் பறந்து வாழும் இலங்கையர்கள் உள்ளிட்ட முஸ்லிம் சமூகங்களுக்கு ஷபீக் மெளலவி அவர்கள் வழங்கி இருந்த காத்திரமான தஃவா பணி  மற்றும் வழிகாட்டல்களுக்காக அவரை கெளரவித்தே குறித்த பிரியாவிடை கூட்டம் நடாத்த பட்டிருந்தது.                                           

அவர் இங்கிலாந்தில்  தங்கி இருந்த காலங்களில் சுமார் 05 வருட காலங்கள் கடுமையான சிறுநீரக நோயினால் அவதிப்பட்டு இரத்த சுத்திகரிப்பு ( Dialysis ) செய்து வந்த நிலையில் 2015 நவம்பர் மாதம் இங்கிலாந்தை துறந்து இலங்கை வர தயாராகி கொண்டிருந்த இறுதி  சந்தர்ப்பத்தில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதத்தில்  அள்ளாஹ்வின் அருளால் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ( Kidney Transplantation )  மேற்கொள்ள பட்டிருந்தது பலருக்கும் ஞாபகமிருக்கலாம்.  

அவர் அந் நாட்டில் நோயினால் அவதிப்பட்டு வந்த கால பகுதி உற்பட அங்கு அவர் வசித்து வந்த கால பகுதி முழுவதிலும்  அந் நாட்டில் வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகங்களுக்கு ஆத்மீகம்,  சமூகவியல், கல்வி உள்ளிட்ட பல்துறைகளிலும் எந்தளவு சிறப்பான சேவைகளை வழங்கி இருந்தார் என்பதை கடந்த வாரம்  அவருக்காக நடாத்த பட்டிருந்த  பிரியாவிடை கூட்டம் தெளிவு படுத்தி இருந்தது. இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை மற்றும் தென் இந்திய தமிழக முஸ்லிங்களை பிரதிநிதித்துவ படுத்தும் 13 அமைப்புகளை சேர்ந்த ஏறாளமான சகோதரர்களும் மேலும் இலங்கை சாராத தெற்காசிய, அரபு, ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த  சகோதரர்களும் பல உலமாக்களும் குறித்த பிரியாவிடை கூட்டத்தில் கலந்து சிறப்பித்திருந்தனர்.             



இன்ஷா அள்ளாஹ் இவ்வாரம்  இலங்கை வந்தடையவுள்ள  ஷெய்க் ஷபீக் zஸுபைர் அவர்களை அல்லாஹ் பொருந்தி  கொண்டு, அவர்களுக்கு பூரண உடல் ஆரோக்கியத்தையும் வழங்கி, அவர்களது ஈருலக வாழ்க்கையையும் மனமானதாக ஆக்கி வைப்பானாக.                     

தகவல் : அஹ்மத் ஷா ருஸ்தி.                
தெற்கு லண்டன்.
ஷபீக் மெளலவி அவர்களுக்கு லண்டனில் பிரியாவிடை ஷபீக் மெளலவி அவர்களுக்கு லண்டனில் பிரியாவிடை Reviewed by Madawala News on 9/08/2017 11:22:00 AM Rating: 5