tg travels

கல்முனை றினோன் விளையாட்டுக் கழகத்துக்கு யஹ்யாகான் பவுண்டேஷன் நிதி உதவி!



-எம்.வை.அமீர்-
பல வருடங்களாக பிரதேசத்தின் தேவையுடைய பாடசாலைகள்,அமைப்புக்கள்,
விளையாட்டுக்கழகங்கள் மற்றும் தனிநபர்கள் என பல்வேறு உதவிகளை செய்துவரும் யஹ்யாகான் பௌண்டேசன், 2017-09-01 ஆம் திகதி கல்முனை றினோன் விளையாட்டுக் கழகத்துக்கு அக்கழகத்தின் உட்கட்டுமானத்தை அபிவிருத்தி செய்யும் பொருட்டு ஒருதொகை நிதியை அன்பளிப்புச் செய்ததது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அக்கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளரும் சமூக சிந்தனையாளரும் தொழிலதிபருமான ஏ.சி.யஹ்யாகான், றினோன் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் எம்.எப்.எம்.ஏ.றிப்கியிடம் குறித்த அன்பளிப்புக்கான காசோலையை வழங்கிவைத்தார்.

பாடசாலைகளுக்கு போட்டோ பிரதி உபகரணங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் நிதியுதவி தனிநபர்களுக்கான மின் இணைப்பு நீர் இணைப்பு புலமைப்பரிசில் என பல உதவிகளை வழங்கி வரும் ஏ.சி.யஹ்யாகான், விளையாட்டுக்கழகங்களின் அபிவிருத்திக்கும் உதவிவருவது குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வின்போது றினோன் விளையாட்டுக் கழகத்தின் பிரதிநிதிகளும் யஹ்யாகான் பௌண்டேசனின் சார்பில் செயலாளர் ஏ.சி.எம்.றியால்,பொருளாளர் ஏ.எம்.நவாஸ்,உபதலைவர் ரீ.எல்.எம்.இல்லியாஸ்,எம்.எம்.வுஹாரி உள்ளிட்ட அதிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
கல்முனை றினோன் விளையாட்டுக் கழகத்துக்கு யஹ்யாகான் பவுண்டேஷன் நிதி உதவி! கல்முனை றினோன் விளையாட்டுக் கழகத்துக்கு யஹ்யாகான் பவுண்டேஷன் நிதி உதவி! Reviewed by Madawala News on 9/01/2017 09:13:00 PM Rating: 5