Ad Space avaiable

மெக்சிகோ நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி அனுதாபம்..


மெக்சிகோ பியூப்லா மாநிலத்தில் சிறுவர்கள் உட்பட பல உயிர்கள் பலியாவதற்கு காரணமான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

மெக்சிகோ ஜனாதிபதி என்ரிக் பெனா நீடோக்கு அனுப்பிவைத்துள்ள அனுதாபச் செய்தியில், எமது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இந்த பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடனும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடனும் உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 

ஜனாதிபதி அனுப்பிவைத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


மேன்மைதங்கிய என்ரிக் பெனா நீடோ

மெக்ஸிகோ ஜனாதிபதி


பியூப்லா மாநிலத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சிறுவர்கள் உட்பட பல உயிரிழப்புகள் ஏற்பட்டதை அறிந்து ஆழ்ந்த கவலை அடைகிறேன். இந்த அனர்த்தத்தினால் ஏற்பட்ட தாக்கம் கடுமையானது என்றும் நிலநடுக்க மையத்திலிருந்து தொலைவில் உள்ளது என்றும் அறிகிறேன்.

 

மெக்ஸிகோ அதன் தென்கரையோரப்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்திலிருந்து மீண்;டு வருகின்ற நிலையில், இலங்கை அரசாங்கமும் மக்களும் இந்த சவால் மிகுந்த தருணத்தில் மெக்ஸிகோ அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதில் என்னுடன் இணைந்துகொள்கின்றனர். எமது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இந்த பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடனும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடனும் உள்ளன.

 

உங்களது சிறந்த தலைமைத்துவமும் மெக்ஸிகோ மக்களின் விரிவாற்றல் உணர்வும் இந்த இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட பேரழிவுகள் மற்றும் மனவேதனைகளில் இருந்து மீள்வதற்கு உதவும் என நாம் நம்புகிறோம்.

 

மைத்ரிபால சிறிசேன

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி


மெக்சிகோ நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி அனுதாபம்.. மெக்சிகோ நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி அனுதாபம்.. Reviewed by Madawala News on 9/25/2017 04:41:00 PM Rating: 5