Ad Space avaiable

இலங்கை அணி வேண்டுமென்றே தோற்றதா ?ஐ. சி.சி ஊழல் ஒழிப்பு பிரிவு விசாரணை.



சிறி லங்கா கிரிக்கெட் தொடர்பில் ஐ.சி.சி ஊழல் ஒழிப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

40 க்கும் மேற்பட்ட இலங்கை கிரிக்கெட் போட்டியாளர்கள் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. 

முன்னாள் வேக பந்து வீச்சாளர் மற்றும் தெரிவுக்குழு உறுப்பினரான பிரமோத்ய விக்கிரமசிங்கவினால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் அண்மையில் இந்த மகஜர் சிறிலங்கா கிரிக்கெட் போட்டியாளர்களால் கிரிக்கெட் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டது .


தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றின் நேர்காணலில், மேற்படி போட்டிகளின்போது சந்தேகத்துக்கு இடமான சில அசாதாரண நிகழ்வுகளைக் காண முடிந்தது என்று தெரிவித்திருந்தார்.


போட்டிக்கு முன்னதான வீரர்களின் சந்திப்பில், சம்பந்தமே இல்லாத ஒருவர் கலந்துகொண்டமை, நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்றால் என்ன செய்வது என்ற அணியின் தீர்மானத்தை அணித் தலைவர் மாற்றியமைத்தது, போட்டியின்போது உரிய அனுமதி அல்லது வழிகாட்டல் இன்றி பின்வரிசை வீரர் ஒருவர் முன்வரிசையில் ஆடச் சென்றது உள்ளிட்ட ஒன்பது குற்றச்சாட்டுக்களை பிரமோத்ய தெரிவித்திருந்தார்.


இவை இயற்கைக்கு மாறான செயல்கள் என்றே தாம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


இவற்றைக் கடுமையாக நிராகரித்திருக்கும் அணி வீரர்கள், அவை குறித்து ஆய்வு நடத்துமாறும், முடியுமானால் தாம் சுமத்திய குற்றச்சாட்டுக்களை பிரமோத்ய நிரூபித்துக் காட்டட்டும் என்றும் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை அணி வேண்டுமென்றே தோற்றதா ?ஐ. சி.சி ஊழல் ஒழிப்பு பிரிவு விசாரணை. இலங்கை அணி வேண்டுமென்றே தோற்றதா ?ஐ. சி.சி ஊழல் ஒழிப்பு பிரிவு விசாரணை. Reviewed by Madawala News on 9/24/2017 08:53:00 AM Rating: 5