tg travels

மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயல் பரிபாலன சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மாபெரும் கண்டனப் பேரணி.



மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயல் பரிபாலன சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மாபெரும் கண்டனப் பேரணி.
 
மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயலின் பரிபாலன சபையினால் மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து நடாத்தப்படவுள்ள மாபெரும் கண்டனப் பேரணியானது இன்ஷா அல்லாஹ் 08.09.2017 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து நடைபெறவுள்ளது. 

பிரதேச பள்ளிவாயல்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், பொது அமைப்புக்கள், சமூகத் தொண்டு நிறுவனங்கள், விளையாட்டுக் கழகங்கள், இளைஞர் கழகங்கள் மற்றும் பிரதேச வாசிகள் அனைவரினதும் முழு ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ள இம்மாபெரும் பேரணியில் அனைவரையும் கலந்து கொண்டு எமது முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பிற்காக பிரார்த்திக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
 
இவ்வண்ணம்
பள்ளிவாயல் பரிபாலன சபை,
மீரா ஜும்ஆ பள்ளிவாயல்
மீராவோடை.

மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயல் பரிபாலன சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மாபெரும் கண்டனப் பேரணி.  மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயல் பரிபாலன சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மாபெரும் கண்டனப் பேரணி. Reviewed by Madawala News on 9/08/2017 12:23:00 AM Rating: 5