Kidny

Kidny

இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சுபீட்சத்திற்காக இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் ; நரேந்திர மோடி ..




இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சுபீட்சத்திற்காக இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குமென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவை இந்தியப் பிரதமரை முதன் முறையாகச் சந்தித்த போது,  பிரதம மந்திரி நரேந்திர மோடி இதனை குறிப்பிட்டுள்ளார். 

நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கு இரு நாடுகளும் மேலும் நெருக்கமான முறையில் செயற்பட வேண்டுமென்றும் பிரதமர் குறிப்பிட்டார். 
 
இந்தச் சந்திப்பின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவின் நல்வாழ்த்துக்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிககைகள் மேற்கொள்ளப்படுமென்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன குறிப்பிட்டார். 

வெளிநாட்டவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தமது அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்ற பின்னர் மேற்கொண்ட உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சுபீட்சத்திற்காக இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் ; நரேந்திர மோடி ..  இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சுபீட்சத்திற்காக இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் ; நரேந்திர மோடி .. Reviewed by Madawala News on 9/10/2017 04:35:00 PM Rating: 5