Kidny

Kidny

எம்மை எவராலும் அசைக்க முடியாது ; ராஜித


எம்மை எவராலும் அசைக்க முடியாது என அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

நிக்ழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார் ..

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் ..

புகையிலை மீது உலக வரலாற்றில் அதிகமான அளவு நானே வரி விதித்தேன்.அதனை குறைக்குமாறு கோரி இந்த நாட்டில் 135 வருடங்களாக இயங்கிவரும் நிறுவன உரிமையாளர் தனி விமானத்தில் இலங்கைக்கு வந்தார். அவர் பிரதமர் உள்ளிட்டவர்களை சந்தித்து பேசினார்கள்.அப்போது பிரதமர் ரனில் விக்ரமசிங்க எனக்கு ஒரு தகவல் அனுப்பினார்.

"ராஜித நீங்கள் எந்த நாளும் அமைச்சராக இருக்கமாட்டீர்கள் ஒரு நாள் இந்த நாட்டை பொறுப்பேற்க வேண்டி வரும் அதனால் தனியார் தரப்பும் முக்கியம் எனவே இந்த வரியை பரிசீலனை செய்யுங்கள்" என்பதே அந்த தகவல்.

அதனை தொடர்ந்து அந்த தனியார் கம்பனி உரிமையாளர் என்னிடம் பேசினார் நான் அவரிடம் சில கேள்விகளை கேட்டேன் அவர் பிறகு என்னோடு கதைப்பதாக கூறினார்.ஆனால் அவர் என்னோடு இதுவரை கதைக்கவில்லை.

குறித்த கம்பனிகளே மருத்த சங்கங்களுக்கு பணம் கொடுத்து எனக்கு எதிராக தூண்டி விடுகின்றனர். யார் என்ன செய்தாலும் எம்மை எவராலும் அசைக்க முடியாது என குறிப்பிட்டார் .
எம்மை எவராலும் அசைக்க முடியாது ; ராஜித எம்மை எவராலும் அசைக்க முடியாது ; ராஜித Reviewed by Madawala News on 9/12/2017 12:27:00 AM Rating: 5