Kidny

Kidny

யார் அந்த கறுப்பு ஆடு...!




20வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு 2/3 பெரும்பான்மை தேவைபடுவதற்கு முன் அரசாங்கத்தின் நிலைப்பாடு வேறுமாதிரியாக  இருந்துள்ளது.

சட்டமா அதிபர் 2/3 பெரும்பாண்மை மூலம்தான் இந்த சட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்றதன் பிற்பாடுதான், அந்த திருத்தத்திற்கு ஆதரவளிக்க மறுத்தவர்களை எல்லாம் மாற்றுவதற்கு முயற்சித்திருக்கின்றார்கள். அந்த முயற்சி மிரட்டல்வரையும் சென்றுள்ளது.

அதன் பிற்பாடு இந்த சட்டத்தை கடைசிவரையும் எதிர்க்கவேண்டும் என்ற நிலையிலிருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏதோ காரணத்துக்காக வாக்களிப்பதற்கு சம்மதித்து விட்டார்களாம். அதே நேரம் கடைசிவரையும் நாங்கள் வாக்களிக்கமாட்டோம் என்று ஒரு பிடியில் நின்ற ரிசாட் பதியுதீனுக்கும் ராஜித அவர்களுக்கும் கடும் வாக்குவாதம் நடந்துள்ளது.அதற்கு பிறகு நாம் ஐந்து பேருமாவது எதிர்த்து வாக்களிப்போம் என்ற முடிவில் இருந்தபோது ரிசாட் பதியுதீனின் கட்சியை சேர்ந்த ஒரு கறுப்பு ஆடு தலைமறைவாகி விட்டதாம்.

அதன் பிற்பாடு ரணிலும், அமெரிக்காவிலிருந்து மைத்திரியும் படாதபாடுபட்டு அந்த திருத்தத்திற்கு ஆதரவாக ஆள் சேர்த்துவிட்டார்கள் என்ற செய்தியோடு, மறுபக்கம் மிரட்டலும் நடத்தி காரியத்தை சாதித்துள்ளார்கள் என்ற விடயமும் நடந்துள்ளது.

அதன் பிறகு நாம் நான்கு பேரும் வாக்களித்து பயனில்லை என்ற நிலையில்தான் இவர்களும் வாக்களித்துள்ளார்கள் என்று கூறப்படுகின்றது.அதன் பின் தங்களது இயலாமையை மறைப்பதற்காகத்தான் மாற்றுக் கதைகளை இவர்கள் பேசிவருகின்றார்கள் என்ற உண்மையும் கசிந்து வருகின்றது. 

ஆகவே எல்லோரும் ஒத்து நின்றிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது, என்னதான் இருந்தாலும் 20வது திருத்தச்சட்டம் முஸ்லிம் சமூகத்துக்கு சாவுமணிதான் என்பதே பொதுவான கருத்தாகும். பிறகு அதைச்செய்து தறுகின்றோம் இதனைச் செய்து தறுகின்றோம் என்ற வாக்குகள் எல்லாம் நடுக்கடலில் கப்பலைத் திருப்புற கதைதான் என்பதேயாகும்.

இவர்களுடைய ஒற்றுமையின்மையின் காரணமாக முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்பதே உண்மையாகும்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.
யார் அந்த கறுப்பு ஆடு...! யார் அந்த கறுப்பு ஆடு...! Reviewed by Madawala News on 9/25/2017 01:22:00 PM Rating: 5