Ad Space Available here

கேள்விக்குறியாகும் தேர்தல் மாற்றமும் -முஸ்லீம்களின் தனித்துவ அரசியலும்தேர்தல்முறை சீர்சிருத்தம் பல்லினம் வாழ்கின்ற பலகட்சி முறைசார்ந்த அரசியலில் மிகவும் சிக்கலும் சவால்களும் நிறைந்த விடயமாகும்.ஐனநாயக விழுமியங்ளை விட ஒவ்வொரு கட்சியும் தமக்கான ஆசனங்களையும் ,எதிர்கால தேர்தல் வெற்றியையும் மையப்படுத்தியே இதனை நோக்குவதால் ஐனநாயகம் கேள்விக்குறியாகின்றது.மறுபுறம் பெரும்பான்மை சமூகம் தனது அரசியல் இருப்பை பலமாக்கும் நோக்குடனே நகர்வதாலும் சிறுபான்மையினரின் அரசியல் கேள்விக்குறியாகிறது.

1978ம் ஆண்டு அரசியலமைப்பு ஐனாதிபதி ஜேஆர் ஜெயவர்தனவால் உருவாக்கப்பட்டதோடு,அதனை மாற்றுவதில் கடினமான சரத்துகளை உள்வாங்கினார்.இதனால் மாறிமாறி ஆட்சிக்கு வந்த பலஅரசாங்கங்கள் அரசியலமைப்பில் மாற்றஙறளை உருவாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் பயனற்றதாகவே இதுவரை உள்ளது.

இருந்தும் சிறுபான்மையினரை அதிகாரமற்றவர்களாக வைத்திருக்கும் வகையில் அறிமுகமான 1978அரசியலைப்பு காலோட்டத்தில் கேள்விக்குறியாகியது.

13வது அரசியலமைப்பு சீர்சிருத்தம் மற்றும் ஐனாதிபதி முறையானது,அரசியல் அமைப்பின் ஐனநாயகம்,ஒற்றையாட்சி மற்றும் இறையான்மையே கேள்விக்குறியாக்கியுள்ளது. குறிப்பாக 1994ம் ஆண்டுக்குப் பின்னர் எதிர்பாராதவிதமாக சிறுபான்மை கட்சிகள் ஆட்சியமைப்பதை தீர்மானிக்கும் சக்தியாகவும்(SLMC) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகவும்(TNA) வந்துள்ள நிலையில் சிங்களத் தலைவர்களிடமும் அரசியலைமைப்பு மாற்றப்படவேண்டும் என்ற மனநிலை உருவாகியுள்ளது.ஒருபுறம் இது ஆபத்தாக இருந்தாலும் மறுபுறம் ஆரோக்கியமாகவே சிறுபான்மை தலமைகளால் நோக்கப்பட வேண்டும்.

1978ம் ஆண்டுக்கு முன்னரான தொகுதி தேர்தல்முறை பலமான பாராளுமன்ற அரசாங்கத்தை அமைத்தாலும் ,வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் சிறுபான்மையினரின் விகிதாசாரத்திற்கு நியாயநான பிரதிநிதித்துவத்தை வழங்கவில்லை.இது பாரிய குறைபாடும்,ஜனநாயத்திற்கு முரணாகவும் அமைந்தது.

1978
ஸ்ரீ சுதந்திர கட்சி  - 29.72%  -8 seat
லங்கா சமசமா       -3.61%      -0 Seat
தமிழ்விடுதலை கூ   -6.75%    -18 seat
ஐதேக                   -50.92%    -140 seat
கமியுனிஸ் கட்சி     -1.98%      -0 Seat

1970
ஸ்ரீ சுதந்திர கட்சி  -36.86%  -91seat
லங்கா சமசமா     -8. 68%    -19 Seat
தமிழரசு கட்சி       -4.92%     -13 seat
ஐதேக                   -37.91%      -17 seat
கமியுனிஸ் கட்சி     -3.39%     -6 Seat

1956
மஹஜென  எக்சத்-39.52%  - 51 seat
லங்கா சமசமா     -10.36%  -14 Seat
தமிழரசு கட்சி       -5.39%  - 10 seat
ஐதேக                   -27.91%.  -8 seat
கமியுனிஸ் கட்சி     -4.51%   -3 Seat

சிறுபான்மைக் கட்சிகள் பெரியளவில் இழப்புகளை சந்திக்காத போதும் 1956 &1970ம் ஆண்டுகளில் ஐதேகட்சியும் 1977ம் ஆண்டு சுதந்திரக் கட்சியும் ஏமாற்றங்களை சந்தித்தது.தமிழ் கட்சிகள் தமக்கான பிரதிநிதிகளை தமது கட்சிமூலமும் முஸ்லீம்கள் பெரும்பான்மைக் கட்சிகளினூடாகவும், முதன்முறையாக மலையக மக்கள் 1977ம் ஆண்டுத் தேர்தலில் தனிக்கட்சியாக ஒருபிரநிநிதியையும் பெற்றமை வரவேற்கத்தக்கது.
1977ம் ஆண்டு 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சிக்குவந்த ஜேர் ஜெயவர்தன தனது அதிகாரத்தை தக்கவைத்துக கொள்ள நிறைவேற்று ஜனாதபதி முறையையும்,கட்சியைப் பலப்படுத்த விகிதாசார தேர்தல் முறையையும் அறிமுகம் செய்தார்.குறிப்பாக எதிர்காலத்தில் எந்த அரசாங்கமும் பெரும்பான்மை பலத்தை பாராளுமன்றத்தில் பெறாமல் இருக்கவும்,கூட்டரசாங்கம் அமைந்தாலும் மாற்றமுடியாத வகையில் இந்த அரசியலமைப்பை உருவாக்கினார்.ஆனால் இதன் கசப்பான பிரதிபலிப்பை 1994ம் ஆண்டு முதல் இன்றுவரை ஆட்சியமைக்காமலும், தனிப் பெரும்பான்மை இல்லாமலும் ஐதேகட்சியின் எதிர்காலத்தையே அழித்துவிட்டது.முக்கியமாக சுதந்திரக்கட்சியையும் சிறுபான்மை கட்சிகளையும் இலக்குவைத்து உருவாக்ப்பட்ட 1978ம் ஆண்டு அரசியலமைப்பு பின்னைய காலங்களில் ஐதேகட்சிக்கே ஆப்பாகிவிட்டது.

39வருடகால ஆயுலைக் கொண்ட இந்த அரசியலமைப்பு நாட்டில் பல்வேறு மட்டங்களில் சிக்கல்களையும்,ஜனநாயக விரோத செயற்பாடுகளையும் வளர்த்துவிட்டுள்ளது.

குறிப்பாக:
1-நிறைவேற்று ஐனாதிபதிமுறை சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுத்தது.

2-பலமானதும் ஜனநாயக பெரும்பான்மை பாராளுமன்றத்தை இல்லாது செய்தது.

3-கட்சிகளிடையே தலமைத்துவப் போட்டி மற்றும் உட்கட்சிப் பூசல்களை அதிமாக்கியது.

4-நாட்டில் இனப்பிரச்சனையை தீவிரமாக்கி 30வருடகால யுத்தத்திற்கு காரணமாகியது.

5-விருப்புவாக்கு மற்றும் தேசியப்பட்டியல் முறைகள் திருடர்களையும் ஊழல்வாதிகளையும் தலைவர்களாக உருவாக்கியது.

6-நீதித்துறைச் சுதந்திரம் இல்லாது போனது
7-சகல நிர்வாக அமைப்புகளும் அரசியல்மயமாக்கப்பட்டது.

8-பிரதேச ஒற்றுமை  மற்றும் இனநல்லுறவுகளை அடியோடு அழித்தது.

9-கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் தனிநபர் ஆதிக்கத்தை உருவாக்கி ஜனநாயகத்தை குழிதோன்றிப் புதைத்தது.

10-கட்சிக் கொள்கைகள் மற்றும் சரவதேசக் கொள்கைவிடயங்களில் நிலையற்றதும் உறுதியற்றதுமான செயற்பாடுகளை உருவாக்கியது.

இதுபோன்ற பல்வேறு இதர காரணங்களால் தற்போதைய அரசியலமைப்பில் மாற்றங்களுக்கான அவசியம் அவசயமாக உணரப்பட்டுள்ளது.இருந்தும் சட்டரீதியான சிக்கல்களைவிட நடமுறை ரீதியில் பல்வேறு சலால்களை முகம்கொடுத்துள்ளது.


முஸ்லீம் சிங்கள உறவு::

மிகநீண்ட வரலாற்றைக் கொண்டமுஸ்லீம் சிங்கள உறவு 1978ம் ஆண்டுக்குப் பின்னர் அரசியல் ரீதியாக பிளவுபடத் தொடங்கியது.1989ம் ஆண்டுக்கு முன்னர் சிறந்ததும் ஆளுமைமிக்கதுமான முஸ்லீம் தலமைகள் பெரும்பான்மைக் கட்சிகளினூடாக தெறிவாகினர்.விருப்புவாக்குகள் மற்றும் கிழக்கு முஸ்லீம்களிடையே 1988ம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னரான அரசியல் எழிர்ச்சி முஸ்லீம்களின் அரசியலை தனித்துவமிக்க சக்தியாக மாற்றத் தொடங்கியது.இதன் காரணனாக 1989 பொதுத் தேர்தலில் 13 மாவட்டங்களில் SLMC சுமார் 32% வாக்குகளையும் கிழக்கில் 52%வாக்குகளையும் பெற்றது.இதன் வளர்ச்சி 2004தேர்தலில் 66%வீதமாக அதிகரித்தது.அத்துன் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக SLMC உருப்பெற்றது.இதன்காரணமாக முஸ்லீம்களின் அரசியல் மாற்றம் அஷ்ரபின் ஆளுமையால் சக்திமிக்க ஒன்றாகியது.

இதன்காரணமாக முஸ்லீம்-சிங்கள உறவுகளில் பாரிய இடைவெளி உண்டானது.முக்கியமாக பெரும்பான்மைக் கட்சிகளிடம் இருந்த முஸ்லீம் வாக்குவங்கி இல்லாது போனது.இதன் காரணமாக சிங்கள கடும்போக்குவாதம் தலைதூக்கத் தொடங்கியது. இருந்தும் 2012 கிழக்குமாகாணசபைத் தேர்தல் மற்றும் மேல்மாகாணம்,ஊவாமாகாணசபைத் தேர்தல்கள் அதன்பின்னரான பராளுமன்றத் தேர்தல்களில் SLMCன் வாக்கு வாங்கியில் பாரிய வீழ்ச்சிகண்டது.குறிப்பாக 2014ம் ஆண்டுக்குப் பின்னர் முஸ்லீம்கள் மீதான சிங்களப் பேரினவாதம் அதிகரித்த போதும் முஸ்லீம் வாக்குகள் எதிர்பார்க்கப்பட்டளவில் முன்னேற்றமடையவில்லை.
ஆகவே அரசியலைப்பு சீர்சிருத்தத்தை முன்னெடுக்கும் பெரும்பான்மைக் கட்சிகள் 1978ம் ஆண்டுக்கு முன்னரைப் போல முஸ்லீம்களின் நம்பிக்கையையும் வாக்குகளையும் தமக்குச் சாதகமாக பயன்படுத்த வேண்டும்.அப்போதுதான் புதிய அரசியலமைப்பு சீர்சிருத்தத்தில் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் நின்று பொதுவான உடன்பாடுகளையும் சமரசத்தையும் உருவாக்கலாம்.

தமிழ்-சிங்கள உறவு:
இந்த இரண்டு இனங்களுக்கிடையிலான உறவு மிகநீண்டகாலமாக ஆரோக்கிகமாக இருக்கவில்லை.பல்வேறு கசப்பான செயற்பாடுகளால் தமிழ் இளைஞர்களை ஆயுதக் கலாச்சாரத்திற்கு உற்படுத்தி நீண்டகால யுத்தத்தில் முடிவடைந்துள்ளது.அரசியல் தலமைகள் ஓரளவு மிதவாதக் கொள்கையுடன் இருந்தாலும் இரண்டு இனங்களும் ஒருவரை ஒருவர் இன்னும் எதிரிகளாகவே பார்க்கின்றனர்.ஆயுதரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தமிழ்மக்கள் பலமாகவே இருந்து வருகின்றனர்.1977ம் ஆண்டு பழைய அரசியலமைப்பிலும் 1978ம் ஆண்டு உருவான தற்போதைய அரசியல் அமைப்பிலும் எதிர்க்கட்சியாக இருந்து தமது பிரதிநிதித்துவ அரசியலை பாதுகாத்து வருகின்றனர்.இரண்டு மாகாண சபைகளில் ஆட்சியமைக்கும் அதிகாரப் பலத்தை வைத்துள்ளனர்.இந்த மக்களுக்கான எதிர்பார்ப்பு புதிய அரசியலமைப்பில் அதிகாரப் பரவலாக்கம் ஒன்றே ஆகும்.

ஆனால் முஸ்லீம் தலமைகள் தற்போது பல்வேறு முரண்பாடான நிலைப்பாடுகளிலும்,முஸ்லீம் வாக்காளர்கள் தெளிவற்ற போக்குகளிலும் உள்ளனர்.உண்மையில் தமிழ் தலமைகளிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.கடந்த மாத உள்ளூராட்சிமன்ற சீர்சிருத்தப் பிரேரணை,18வது அரசியலமைப்பு சீர்சிருத்தம் போன்றவற்றில் வரலாற்றுத் தவறுகளை முஸ்லீம் தலமைகள் செய்துள்ளது.எதிர்வரும் 20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலும் தெளிவற்ற நிலையிலை முஸ்லீம் அரசியல் உள்ளது.இந்த நிலையில் அரசியலமைப்பின் முற்றான திருத்தம் முஸ்லீம் சமூகத்திற்கே பாரிய சவாலாக அமைந்துள்ளது.

தற்போது நாட்டில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் அரசியல் ரீதியாக தங்களை ஏதோ ஒருகோணத்தில் திடமாக வைத்துள்ளனர்.தனித்துவ அரசியல் என்ற போர்வையில் தனிமையாக்கப்பட்ட முஸ்லீம் சமூகம் அதன் தலைவர்களாலே அநாதையாக விடப்பட்டுள்ளது.தங்களின் தலமைத்துவம் மற்றும் ஆசனங்களை மட்டுமே இலக்கு வைத்து நகர்கின்ற முஸ்லீம் அரசியலில் முஸ்லீம் சமூகத்திற்கான ஒட்டுமொத்த அங்கீகாரம் கேள்விக்குறியாக உள்ளது.

முஸ்லீம்களின் சிவில் அமைப்புகள் மற்றும் கல்விமான்களும் பரிந்து நிற்கும் முஸ்லீம் அரசியலில் குளிர்காய்வது மிகவும் ஆபத்தான விடயமாகும்.ஆகவே முஸறலீம் சமூகம் அரசியல் தலமைகளுக்கு அப்பால் நின்று புதிய அரசியலமைப்பு மாற்றத்தில் தமது இருப்பையும்,பாதுகாப்பையும் கூடிய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த கருத்து ஒருமைப்பாட்டுடன் செயற்படவேண்டும். இல்லாவிடின் முஸ்லீம் சமூகத்தின் எதிர்காலம் புதிய அரசியலமைப்பின் மூலம் சூன்யமாக்கப்பட்டுவிடும்.

கேள்விக்குறியாகும் தேர்தல் மாற்றமும் -முஸ்லீம்களின் தனித்துவ அரசியலும் கேள்விக்குறியாகும் தேர்தல் மாற்றமும் -முஸ்லீம்களின் தனித்துவ அரசியலும் Reviewed by Madawala News on 9/05/2017 11:22:00 PM Rating: 5