Ad Space avaiable

புதிய யாப்புக்கு சர்வசன வாக்கெடுப்பு அவசியம்


மாநா­யக்க பீடங்கள் வலி­யு­றுத்தல் 

புதிய அர­சியல் அமைப்பு மூல­மாக தீர்வு உண்­டாகும் என கூறிய போதிலும் அதி­கார பர­வ­லாக்கல் பாரிய சிக்­கல்­களை  உரு­வாக்க வாய்ப்­புள்­ள­தா­கவும் புதிய அர­சியல் அமைப்பு தொடர்பில் சர்­வ­சன வாக்­கெ­டுப்பு அவ­சியம் எனவும் மல்­வத்து, அஸ்­கி­ரிய மாநா­யக்க பீடங்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளன. 

அர­சாங்கம் நினைப்­பது ஒன்­றா­கவும், கூறு­வது ஒன்­றா­கவும் செய்­வது வேறொன்­றா­கவும் உள்­ளது. ஏமாற்று வேலை­களை நிறுத்த வேண்டும் எனவும் அவை குறிப்­பிட்­டுள்­ளன. 

அர­சியல் அமைப்பு குறித்த இடைக்­கால அறிக்கை பாரா­ளு­மன்ற சபை முதல்வர் அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்­ல­வினால் மல்­வத்து, அஸ்­கி­ரிய மாநா­யக்க தேரர்­க­ளுக்கு முன்­வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் புதிய அர­சியலமைப்பு குறித்து மாநா­யக்க தேரர்கள் தமது நிலைப்­பாட்டை தெரி­விக்கும் போதே இதனை குறிப்­பிட்­டுள்­ளனர். 

 மல்­வத்து மாநா­யக்க தேரர்­ திப்­பட்­டு­வாவே ஸ்ரீ சுமங்­கல தேரர் கூறு­கையில், நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­பட வேண்டும் என்­பது எமது நிலைப்­பா­டா­கவும் உள்­ளது. அதேபோல் பல்­வேறு பிரச்­சி­னைகள் குறித்து சரி­யான தீர்­மானம் ஒன்றை எடுக்க வேண்டும். ஆகவே முறை­யான வகையில் அர­சியலமைப்பு கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். 

பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அனை­வ­ரதும் ஒத்­து­ழைப்­புடன் இதனை கொண்­டு­வர வேண்டும். மாறாக, எவ­ரதும் தனிப்­பட்ட தேவை­களை முன்­னி­றுத்தி இவற்றை கையாளக் கூடாது.  மேலும் மக்­களின் கருத்­துக்கு அதி முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட வேண்டும். மக்கள் கருத்­த­றியும் நட­வ­டிக்­கை­களை நிரா­க­ரித்து ஒரு­போதும் அர­சியலமைபை உரு­வாக்க முடி­யாது. இதனை அர­சாங்கம் நினைவில் வைத்­து­க்கொள்ள வேண்டும். 

அர­சாங்கம் நினைப்­பது ஒன்­றா­கவும், கூறு­வது ஒன்­றா­கவும் செய்­வது வேறொன்­றா­கவும் உள்­ளது. மக்­களின் கண்­களில் மண்ணை தூவி­விட்டு அர­சாங்கம் தனக்குத் தேவை­யா­னதை செய்­து­வ­ரு­கின்­றது என்­பதே இன்­றுள்ள மிகப்­பெ­ரிய குற்­றச்­சாட்­டாகும். அர­சாங்கம் மேற்­கொள்ளும் இத்­த­கைய செயற்­பா­டு­களை கவ­னிக்­கா­து­விட்டால் நாடும் இனமும் பௌத்த சாசனமும் அழியும் நிலை ஏற்­படும். நாட்டின் பெளத்த கொள்­கைக்கு முன்­னு­ரிமை வழங்கும் வகையில் செயற்­பட வேண்டும். மக்கள் அமை­தி­யா­கவும் நாடு பாது­காப்­பா­கவும் இருக்கும் வகையில் இவற்றை முன்­னெ­டுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

அஸ்­கி­ரிய மாநா­யக்க தேரர் ஆன­ம­டுவே தம்­ம­தாச தேரர் கூறு­கையில்,  புதிய அர­சியலமைப்பு ஒன்று அவ­சி­யமா இல்­லையா என்­பது குறித்து நாம் ஆழ­மாகச் சிந்­திக்க  வேண்டும். அதி­காரப் பர­வ­லாக்கல் என்று கூறிக்­கொண்டு மாகா­ண­ச­பை­க­ளுக்கு காணி, பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கு­வது நாட்­டுக்கு ஆரோக்­கி­ய­மான ஒன்­றாக அமை­யாது என்ற நிலைப்­பாடு உள்­ளது. 

மாகா­ண­சபை முறை­மை­யிலும் குள­று­ப­டிகள் உள்­ளன. எனினும் இப்­போது மாகா­ணங்கள் இயங்கி வரு­வ­தனால் நாம் சற்று அமை­தி­யாக உள்ளோம். இந்த நாடு மிகவும் சிறி­ய­தொரு நாடாகும். இந்த நாட்­டினை துண்­டாடும் நோக்­கங்கள் தடுக்­கப்­பட  வேண்டும் என மக்கள் கரு­து­கின்­றனர். 

பார­ளு­மன்­றத்தில் மக்கள் பிர­தி­நி­திகள் புதிய அர­சியலமைப்பு  விட­யத்தில் இணக்கம் தெரி­வித்த போதிலும்  மக்கள் புதிய அரசியல் அமைப்பு விடயத்தில் ஆதரவை தெரிவிக்கின்றனரா என்பதை ஆராய வேண்டும். ஆகவே புதிய அரசியல் அமைப்பு குறித்து மக்கள் கருத்தை ஆராய வேண்டியது முக்கியமான விடயமாகும் என நாம் நினைக்கின்றோம். இது சாதாரண விடயம் அல்ல. ஆகவே மக்களின் நிலைப்பாட்டை ஆராய்வதே பிரதானமாகும் என்றார். 

புதிய யாப்புக்கு சர்வசன வாக்கெடுப்பு அவசியம் புதிய யாப்புக்கு சர்வசன வாக்கெடுப்பு அவசியம் Reviewed by Madawala News on 9/25/2017 03:09:00 PM Rating: 5