tg travels

பெண்கள் இருக்கும் இடத்தில் ஊழல், மோசடிகள் இருக்காது




தகுதியானவர்களுக்கு தகுதியான இடம் கிடைக்கக் கூடிய வகையில்இ ஊழல் மிகுந்த தேர்தல் முறையை எனக்கு மாற்றியமைக்க கிடைத்தது எனஇ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். 


மேலும் 'பெண்கள் இருக்கின்ற இடத்தில் ஊழல் மோசடிகள் பெரும்பாலும் குறைந்தே காணப்படும்' எனவும் குறிப்பிட்டார். 


இது குறித்து அவர் இன்று (03) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது 


'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பணிப்புரைக்கமைய நீண்டகாலம் நடைமுறையில் இருந்த ஊழல் மிகுந்த தேர்தல் முறைமை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 


'இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அமைச்சரவை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் குழாம்இ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்இ எல்லை நிர்ணய குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். 

'அத்துடன்இ தனது செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்க அனைவரும் தமக்கு வழங்கிய சக்தியை பெரும் கௌரவத்துடன் எண்ணுகின்றேன். 


'நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டும்இ நாட்டு மக்களுக்காகவும் அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்தேன். இதனால் எதிர்காலத்தில் சிறந்த அரசியல் அனுபவம் கொண்ட பரம்பரை தோற்றம் பெரும். 


பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதமாக அதிகரித்துள்ளதன் மூலம்இ அரசியலில் பெண்களின் பிரவேசம் அதிகரித்துள்ளமை எமக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். பெண்கள் இருக்கின்ற இடத்தில் ஊழல்இ மோசடிகள் பெரும்பாலும் குறைந்தே காணப்படும்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  





பெண்கள் இருக்கும் இடத்தில் ஊழல், மோசடிகள் இருக்காது பெண்கள் இருக்கும் இடத்தில் ஊழல், மோசடிகள் இருக்காது Reviewed by Madawala News on 9/03/2017 10:38:00 PM Rating: 5