Ad Space avaiable

நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்கம் நியூ­யோர்க்கில் இன்று ஆர்ப்பாட்டம்.!


நியூ­யோர்க்கில் உள்ள ஐ.நா. தலை­மை­ய­கத்தில் 72 ஆவது பொதுச்­சபைக் கூட்­டத்­தொ­டரில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்று உரை­யாற்­ற­வுள்ள நிலையில், அவ­ருக்கு எதி­ரான போராட்டம் ஒன்றை நடத்த நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்கம் ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டுள்­ளது.

இது­தொ­டர்­பாக, நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்­கத்­தினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள செய்­திக்­கு­றிப்பில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது,
இலங்கை அர­சாங்கம் ஒரு குற்­ற­வாளி என்ற தொனிப்­பொ­ருளில் இலங்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஐ.நா. உரைக்கு எதி­ரான மக்கள் போராட்­ட­மொன்று நியூ­யோர்க்கில் இடம்­பெற இருக்­கின்­றது.
ஐ.நா. பொதுச்­ச­பையின் வரு­டாந்தக் பொதுக்­கூட்­டத்தில் பங்­கெ­டுக்கும் இலங்கை ஜனா­தி­பதி இன்று 19 ஆம் திகதி  உரை நிகழ்த்த இருக்­கின்றார்.

இந்­நி­லையில், அவ­ரது உரை இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும் சம­வேளை, இலங்கை அர­சினை குற்­ற­வாளிக் கூண்டில் ஏற்றும் வகையில் மக்கள் போராட்­ட­மொன்­றினை நாடு­க­டந்த தமி­ழீழ அர­சாங்கம் ஏற்­பாடு செய்­துள்­ளது.

இப்­போ­ராட்­டத்தில் நாடு­க­டந்த தமி­ழீழ அர­சாங்­கத்தின் பிர­தமர் வி.உருத்­தி­ர­கு­மாரன் பங்­கெ­டுத்து அனைத்­து­லக அரங்கில் இலங்கை அரசு ஒரு குற்றவாளி என்ற தொனிப்பொருளில் அதன் குற்றங்களை பட்டியலிட இருக்கின்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்கம் நியூ­யோர்க்கில் இன்று ஆர்ப்பாட்டம்.! நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்கம் நியூ­யோர்க்கில் இன்று ஆர்ப்பாட்டம்.! Reviewed by Madawala News on 9/19/2017 12:30:00 PM Rating: 5