tg travels

ரோஹிங்கியா முஸ்லிம்களை துருக்கி கைவிடாது



ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு உதவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள துருக்கி நாட்டு அதிபர் எர்டோகன் பங்ளாதேஷ் மியன்மார் எல்லையில் எல்லையில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான தங்குமிடங்களை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளார்.

அதற்காக துருக்கி வெளிநாட்டு அமைச்சர் ஊடாக பங்களாதேஷ் அரசிடம் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு அரச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

அங்காரவில் நடந்த விழா ஒன்றில் உரையாற்றிய எர்டோகன்,

ரோஹிங்கியா முஸ்லிம்களை துருக்கி கைவிடாது.ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு உதவ துருக்கி தயாராக இருக்கிறது.உலக நாடுகள் அனைத்திடமும் இதனை எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ரோஹிங்கியா முஸ்லிம்களை துருக்கி கைவிடாது  ரோஹிங்கியா முஸ்லிம்களை துருக்கி கைவிடாது Reviewed by Madawala News on 9/09/2017 01:19:00 AM Rating: 5