Kidny

Kidny

அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம்: இலங்கைக்குள் ஐஎஸ் ஐ கொண்டுவரும் முயற்சி



-Anas Abbas -
அமைச்சரவைக்குக் கூட அறிவிக்காமல் 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம், 10 ஆண்டுகளில் காலாவதியாவதனால் அதனை புதுப்பிக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அப்போதைய யுத்த சூழலை எதிர்கொள்வதற்கு அமெரிக்க இராணுவத்தின் உதவி தேவை எனக் காரணம் காட்டி, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, அமெரிக்க தூதுவர் ரொபர்ட் ஓ ப்ளேக் ஆகிய இரு அமெரிக்கர்களும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

இவ்வருட மார்ச் மாதத்தில் காலாவதியான இந்த ஒப்பந்தத்தை மீளப்புதுப்பிக்கப்படும் என பிரதமர் பாராளுமன்றில் சொன்னாலும் அது அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் அமுலில் இருந்த காலத்தில் நடந்த யுத்தத்தில் அத்துமீறல் நடந்ததாக இப்போது அவர்களே குற்றம் சாட்டுகின்றனர். இந்த ஒப்பந்தம் ஒத்துழைப்பு ஒப்பந்தமாக அப்போதைய அரசினால் சொல்லப்பட்டாலும், இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவின் யுத்தச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க நாடு கடமைப்பட்டுள்ளது. 

ACSA வகையிலான இந்த ஒப்பந்தம் பனிப்போர் காலத்தில் நாடுகளை அடிமைப்படுத்த நேடோவினால் உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்ட நாடுகள் அழிக்கப்பட்டனவேயன்றி அமெரிக்காவினால் பாதுகாக்கப்படவில்லை.

இந்த ஒப்பந்தம் மூலம் யுத்தமொன்றின் போது எமது நிலத்தை அமெரிக்கா பயன்படுத்துவதற்கு வாய்ப்பேற்படுகிறது.இதன் மூலம் ஐஎஸ் போன்ற அமைப்புக்கள் இலங்கைக்குள் நுழைவதற்கும் இதனூடாக நாடு யுத்தகளமாவதற்கும் வாய்ப்பேற்படுகிறது. 

எனவே இந்த ஒப்பந்தத்தினால் நாட்டுக்கு அழிவேயன்றி எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. இதனை அரசாங்கம் முன்கொண்டு செல்லக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம்: இலங்கைக்குள் ஐஎஸ் ஐ கொண்டுவரும் முயற்சி அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம்: இலங்கைக்குள் ஐஎஸ் ஐ கொண்டுவரும் முயற்சி Reviewed by Madawala News on 9/08/2017 07:26:00 PM Rating: 5