Kidny

Kidny

மின்கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை ..


மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சக்தி பொறியியலாளர் 
சங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.


இலங்கை மின்சார சபை எதிர்நோக்கியுள்ள பாரிய நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் பொருட்டே மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு இலங்கை மின்சக்தி பொறியியலாளர் சங்கம் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது. 


தற்போதைய நிலையில் இந்த நிதி நெருக்கடியை ஈடு செய்வதற்கு வேறு வழிகள் இல்லையென்பதால் இதனை ஈடு கட்டாவிடில் இலங்கை மின்சார சபை மிகப்பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்குமெனவும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


இந்த நிலையில், மேற்படி நிதி நெருக்கடிக்கு தீர்வைக் காண வேண்டுமானால் மிக விரைவில் 2500 கோடி ரூபா கூடுதல் வருமானம் தேவைப்படுகின்றது.
மின் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலமே இதற்கு தீர்வைக் காணமுடியுமெனவும் மின்சக்தி பொறியியலாளர் சங்கம் அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. 

மின்கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை ..  மின்கட்டணத்தை  அதிகரிக்க கோரிக்கை .. Reviewed by Madawala News on 9/11/2017 11:43:00 PM Rating: 5