Kidny

Kidny

சந்திரிக்கா அருந்திக இடையே கடும் வாக்குவதம் !



ஜனாதிபதி செயலகத்தில்,புதன்கிழமை இரவு இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கும் பிரதி அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரதி அமைச்சத் அருந்திக பெர்ணான்டோ,அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சனத்துக்கு உட்படுத்தியுள்ள அதேவேளை  முன்னைய அரசாங்கத்தை விமர்சித்த வண்ணம் ஐக்கிய தேசிய கட்சி நாட்டை கொள்ளையடிப்பதாவும் சுதந்திர கட்சி தலைமை ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாக்க செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.இதன் போது அருந்திக பெர்ணாண்டோ சந்திரிக்காவின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்து முன்னாள் ஜனாதிபதியிடம் இருந்த தான் நாட்டை பாதுகாத்ததாக சந்திரிக்கா குறிப்பிட்டுள்ள அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து சந்திரிக்கா சுதந்திரக்கட்சியை அழிக்க செயற்படுவதாக அங்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்திரிக்கா அருந்திக இடையே கடும் வாக்குவதம் ! சந்திரிக்கா அருந்திக இடையே கடும் வாக்குவதம் ! Reviewed by Madawala News on 9/08/2017 12:02:00 PM Rating: 5