Kidny

Kidny

ராபிதா அந்நளீமிய்யீன் வருடாந்த பொதுக் கூட்டம்




(எ.எஸ்.எம்.ஜாவித்)  
2017.09.19

பேருவள ஜாமியா நளீமிய்யாவின் ராபிதா அந்நளீமிய்யீன் வருடாந்த பொதுக் கூட்டம் சமூக விவகாரங்களில் கூட்டுப்பங்களிப்பு எனும் கருப்பொருளின் கீழ் எதிர் வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை ஜாமிய்யா நளீமியாவின் கேட்போர் கூடத்தில் அமைப்பின் தலைவர் அஷ்ஷேக் வை.எல்.எம்.நவவி தலைமையில் இடம் பெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஜாமியா நளீமிய்யாவின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.ஷூக்ரி கலந்து கொள்ளவுள்ளதுடன் பிரதம பேச்சாளராக இலங்கை வைத்திய சங்கத் தலைவர் வைத்தியர் ருவைஸ் ஹனீபாவும் பங்கேற்கவுள்ளார்.

மேற்படி பொதுக் கூட்டத்தில் சகல அங்கத்தவர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறும் தூர இடங்களில் இருப்பவர்கள் முன்கூட்டியே வந்து சேருமாறும் தலைவர் தெரிவிக்கின்றார்.

 

ராபிதா அந்நளீமிய்யீன் வருடாந்த பொதுக் கூட்டம் ராபிதா அந்நளீமிய்யீன் வருடாந்த பொதுக் கூட்டம் Reviewed by Madawala News on 9/20/2017 09:21:00 AM Rating: 5