Ad Space Available here

விலைபோகாமை, நிலைகுலையாமை எனும் பண்புகளுடன் துளிர்விடுங்கள்;! 
அண்மையில் நண்பர் ஒருவரின் முகநூல் பக்கத்தில் இருந்து விலைபோகாமை, நிலைகுலையாமை எனும் சொற்களின் விளக்கம் பற்றிய கட்டுரை ஒன்று வாசிக்கக்கிடைத்தது. முஸ்லிம் ஒருவனது மட்டுமல்ல நற்பிரஜை ஒருவரின் பண்பாக இது இருக்கவேண்டும். ஏனெனில் ஒவ்வொரு தனிமனிதனும் நீதி நியாயங்களின்பால் செய்பட இப்பண்புகள் அவசியம். இப்பண்புகளை ஒவ்வொரு மனிதனும் தன்வாழ்வில் எடுத்துநடக்கும்போது சமூகத்தில் பிரச்சினைகள் தோன்ற வழியிருக்காது.
 
'இங்கு ஒரு மனிதன் எவ்வாறு விலை போகிறான் என்பதை முதலில் நாம் அறிந்திருத்தல் அவசியமாகின்றது. ஒரு மனிதன் இரண்டு சந்தர்ப்பங்களில் விலை போகிறான்.

1. அவன் எதிர்பாராத சலுகைகளையும் வசதிவாய்ப்புகளையும் பெறும்போது.

2. அவன் எதிர்பார்த்த சலுகைகளும் வசதி வாய்ப்புகளும் கிடைக்காதிருக்கும்போது.
இந்த இரு நிலைகளிலும் ஒரு மனிதன் தனது கொள்கைக்கும் இலட்சியத்துக்கும் விலை பேசுகின்றான். இலட்சியம் கொள்கை என்பன யாவும் அப்போது அவனுக்கு சந்தைச் சாமான்களாகிவிடுகின்றன.'
 
மேற்படி நிலை எமது திருநாட்டில் கட்டியம் பேசிக்கொண்டிருக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கு மெச்சப்பொருந்துகின்றது.
 
இன்றைய இலங்கை முஸ்லிம்களின் அரசியல் நிலையினை எடுத்து நோக்கும்போது விலைபோதல் என்பது 2000ம் ஆண்டின் பின்னர் சர்வசாதாரணமாகிவிட்டது என்றால் அது மிகையாகாது. முஸ்லிம்களின் உரிமைகளை இங்குள்ள பெரும்பான்மை சமூகத்திற்கு சமமானதாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் விலைபோன போதுதான் அங்கு பிளவுகள் ஏற்பட்டது. அதன்பின் உருவான கட்சிகள் எல்லாம் படைத்த இறைவனிடம் பயமற்று அவனை மறந்த நிலையில்தான் தங்கள் உயிருக்கும் உடமைக்கும் பயந்து அமைச்சுப்பதவிகளுக்கும் அபிவிருத்தி நிதிகளுக்கும் விலைபோயுள்ளனர்.
 
கட்சித்தலைவர்கள் மட்டுமல்ல தொடண்டர்களும் அக்கட்சிகளினால் வழங்கப்படும் சொற்ப பணத்துக்கும், தொழில்வாய்ப்புகளுக்கும், வெற்றுக்கோசங்களுக்கும் விலைபோகின்றர். வாக்காளப் பெருமக்கள் விலைபோகின்ற நிலை ஒன்று நாடுபூராகவும் தொற்றா நோயாக பரவியுள்ளது கட்சிகள் விலைபோவதற்கு சாதகமாகின்றது.
 
எனவே, வாங்காளப்பெருமக்கள் திருந்திக்கொள்ள வேண்டும் தமது வாக்குரிமையை விற்பனை செய்யாது தப்புச் செய்யும் அரசியல்வாதிகளுக்கு பாடம்புகட்ட பயன்படுத்தவேண்டும்.
 
அரசியல்வாதிகளிடம் சிறுபான்மையினருக்கு எதிராக சட்டமூலங்களுக்கு ஏன் நீங்கள் ஆதவு வழங்கினீர்கள் என்றால் சிறுபான்மைக் கட்சித்தலைவர்கள் தரும் பதில் என்ன தெரியுமா? நாங்கள் ஆதரவு வழங்காவிட்டால் உயிர் அச்சுறுத்தல்;, கட்சியில் இருக்கும் எம்பிக்களை பிரித்து கட்சியை உடைத்திடுவர் என்றெலல்hம் கூறுகின்றர். இத்தனைக்கும் காரணம் இவர்கள் நிலைகுலையாமை எனும் நிலையில் இருந்து தவறியமையும் படைத்தவனை நம்பாமையுமாகும். காலத்துக்கு காலம் நிலைகுலைவதும், தேர்தல் காலங்களில் விலைபோவதும் இன்று சிறுபான்மைக் கட்சியினருக்கு பழகிப்போய்விட்டது.
 
உண்மையில் தங்களது கொள்கையில் உறுதியாகவும், விலைபோகாமலும் இருந்தால் நிலைகுலைய வேண்டிய அவசியமில்லை. தற்கால சூழ்நிலையில் சிறுபான்மையினர் இந்நாட்டில் அதிகம் உரிமைகளை இழந்த நிலையில்தான் வாழ்கின்றனர் எனவே இருக்கின்ற உரிமைகளையாவது தக்கவைத்துக்கொள்ளும் பொறிமுறைகளைத்  தேடியாராய வேண்டும். பாராளுமன்றக் கதிரைகளை மக்களின் தேவைக்காக பயன்படுத்த வேண்டும். அவ்வாறான தலைமைத்துவங்கள் புதிதாக உருவாகவும், உருவாக்கப்படவேண்டிய தேவையும் மிகவும் அவசியமாகும்.
 
புளித்துப்போன சிந்தனைகளையும், கொள்கைகளையும் விட்டுவிட்டு இளம் சந்ததியினர் தங்களது எதிர்கால விடயங்களை நன்கு சிந்தித்து மூவினமக்கள் வாழும் நாட்டில் ஐக்கியமாக வாழக்கூடிய கொள்கைத்திட்டங்களை உள்வாங்கி, உருவாக்கி புதிய பாதையில் பயணிக்க வேண்டும். அதற்கான இளைஞர்கள் தயாராக வேண்டிய நிலையில் நிலைகுலையாமை, விலைபோகாமை போன்ற பண்புகளுடன் அவர்கள் வெளிக்கொண்டுவரப்படவேண்டிய தேவை உள்ளது.
 
ஆனால் நிலைமை எவ்வாறுள்ள உள்ளது என்றால் சொற்ப பணத்துக்காகவும், சிறு இன்பங்களுக்காகவும், தொழில்வாய்ப்புகளுக்காகவும் இன்றைய இளைஞர்கள் அரசியல்வாதிகளால் விலைபேசி வாங்கப்படுகின்றார்கள். இவ்வாறு இளைய சமூகம், பெண்கள் அமைப்புகள் எல்லாம் தேர்தல் காலங்களில், அரசியல் நிகழ்வுகளில் விலைபோகும் நிலையில் உள்ளதால் எதிர்கால நியாய, நேர்மையுள்ள அரசியல் பற்றிய சிந்தனை மழுங்கடிக்கப்பட்டுவருவதை இச்சமுதாயத்துக்கு இழைக்கப்படும் பெரும் கொடூரமும் அநீதியுமாகும்.
 
'எமது நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். நாடு இனப் பிரச்சினைத் தீர்வுக்கான ஒரு முக்கிய கட்டத்தை அடைந்திருக்கிறது. இந்த நேரத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமது சமூகத்திற்கான தீர்வை கிடப்பில் போட்டுவிட்டு கட்சிக்குள் தமக்குஏற்பட்டிருக்கும் சொந்தப் பிரச்சினை களுக்கான தீர்வுகளைத்தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஏன்? எதிர்பார்த்த சலுகைகளும் வசதி வாய்ப்புகளும் கிடைக்காத காரணத் தினாலா? அல்லது எதிர்பாராதவைகள் எங்கிருந்தோ கிடைத்ததனாலா?
 
சலுகைகளுக்காகவும் வசதிவாய்ப்பு களுக்காகவும் இலட்சியங்களை விலை பேசி வாங்கியவர்கள்இ எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்காத போது அதே இலட்சியங்களை ஏன் விலை பேசி விற்கமாட்டார்கள். 'விலை போகாமை' எனும் ஈமானியப் பண்பை இழந்தால் விளைவு அதுதான்.'
 
ஊழல் நிறைந்த அரசியலில் இருந்து வெளிப்பட சமூகம் தயாhராக வேண்டும். இச்சமூகத்திலுள்ள புத்திஜீவிகள், கல்விமான்கள் மட்டுமல்ல படிக்காத மேதைகள், விவசாயிகள், தொழிலாளிகள் என சகலரும் நிலைகுலையாமை, விலைபோகாமை எனும் கருத்தாடலுக்குள் நுழைந்து எதிர்கால சந்தததிக்கான பாதைகளை தூய்மையானதாக மாற்ற வேண்டும்.
 
எஸ்.எம். சஹாப்தீன்.
பட்டதாரி ஆசிரியர்,
நிந்தவூர்.
 
விலைபோகாமை, நிலைகுலையாமை எனும் பண்புகளுடன் துளிர்விடுங்கள்;! விலைபோகாமை, நிலைகுலையாமை எனும் பண்புகளுடன் துளிர்விடுங்கள்;! Reviewed by Madawala News on 9/04/2017 11:08:00 PM Rating: 5