Kidny

Kidny

முஸ்லிம் சமூகத்தை கருவருக்கும் கைங்கரியமே தகைமையற்ற அரசியல் உள்வாங்கள்!!பொலன்னறுவை அரசியல் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்ட பதிவு.

அரசியலும் அரசியல் தலைமைகளும் ஜனநாயக சமூகமொன்றின் நிலைப்பிற்கு இன்றியமையாதவை என்பதில் எவருக்கேனும் மாற்றுக்கருத்து கிடையாது.  அரசியல் தலைமைகளே ஜனநாயக சமூகத்திற்கு அரசியல் ரீதியான வழிகாட்டல்களையும் சமூகத்தின் அபிலாசைகளை வெண்றெடுப்பதிலும் பாரிய பொறுப்பைக் கொண்டவர்கள். ஆகையினால் பொறுத்தமான தகைமையுடைவர்களை இப்பொறுப்புக்களில் அமர்த்துவது சமூகத்தின் தலையாய கடமை அல்லவா?

காலவோட்டத்தில் காணாமற்போய்விட்ட எமது சமூகத்தின் தலைசிறந்த தலைமைகளின் இழப்புக்களின் விளைவுகளே இன்று நாம் அனுபவிக்கும் எமது அபிலாசைகளை குறிப்பிட்ட மட்டத்திலாவது அடைந்து கொள்ள முடியாத அவலங்களுக்கு தள்ளப்பட்டோம் என்பது கசப்பான உண்மையாகும். இவ்வுண்மையை விளங்கிக்கொண்டோ என்னவோ இலங்கையின் பெரும் கட்சிகள் எமது சமூகத்திற்கான தலைமைத்துவத்தில் கை வைக்கும் கைங்கரியத்தைக் கையாள்வதை காண முடிகிறது. 

இலங்கையின் பெரும் அரசியல் கட்சிளின் தற்கால போக்கு பேரினவாதத்தை போஷித்து சிறுபான்மையினரை அடக்கியாழும் நகர்வுகளைக் காணமுடிகிறது. இக்கொள்கையை மறைமுகமாக கச்சிதமாக நடைமுறைப்படுத்தினாலும் வெளிப்படையாக தங்களை ஜனநாயகவாதிகளாக காட்டிக்கொள்ளவே விரும்புகிறார்கள். இக்கொள்கையை மறைமுகமாக கச்சிதமாக நடைமுறைப்படுத்தினாலும் வெளிப்படையாக தங்களை ஜனநாயகவாதிகளாக காட்டிக்கொள்ளவே விரும்புகிறார்கள். நீண்டகால தொலைநோக்குடன் வாய்மூடி மௌனிகளாகும் சிறுபான்மை அரசியல் பிரதிநிதிகளை உருவாக்கவேண்டிய தங்களது இலக்கை நோக்கி இன்றிருந்தே செயற்படத் தொடங்கிவிட்டனர் என்று என்னத்தோன்றுகின்றது. 
 
தரம் தகுதிகளை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு தலை எண்ணிக்கையில் ஜனநாயகத்தை வெளி உலகிற்குக் காட்டி தங்களது முன் தீர்மானிக்கப்பட்ட சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகளை தினித்து எம்மை வாய்மூடி மௌனிகளாய் மாற்றும் கங்கரிமே இது! இல்லையேல்;

01. "நல்லாட்சி" செய்ய விரும்புவோர் நற்பண்புகள் மற்றும் நல்ல வரலாற்றைக் கொண்டோரை தங்களது கட்சியின் சிறுபான்மையினருக்கான பிரநிதிகளாக தெரிவு செய்யாமல் சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் சமூகத்தில் வரவேற்கப்படாத தொழிலில் ஈடுபடுவோரை ஏன் நியமிக்க வேண்டும்?

02. "சட்டவாட்சி" பற்றி பேசுவோர் எதற்காகஅரசியல் யாப்பு என்றால் என்னபொது நிர்வாகத்துறையில் ஒரு சொல்லையேனும் விளங்க முடியாத மற்றும் கல்வியறிவற்ற அடாவடிகளை கட்சியின் சிறுபான்மையினருக்கான இணைப்பாளர்களாக நியமிக்க வேண்டும்?

03. "சிறுபான்மையினர் நலன்" பற்றி அக்கரை கொள்ளும் அரசியல் கட்சிகள் ஏன்எதற்காகஅறிவார்ந்த சமூகத்தின் கனிசமானளவு வரவேற்பைப் பெறாத நபர்களை தங்களது கட்சிகளின் அமைப்பாளராகவும் இணைப்பாளர்களாகவும் நியமிக்க வேண்டும்?

ஆகையால் எமது சமூகம் சிந்தித்து செயலாற்ற வேண்டிய இக்கட்டான காலம்! இன்று கட்சியின் அமைப்பாளர்களாகவும் இணைப்பாளர்களாவும் நியமிக்கப்படுபவர்களே எதிர்வரும் தேர்களிலும் போட்டியிட போகிறார்கள். வேறு தெரிவின்றி இவர்கள் தெரிவுசெய்யப்பட்டால் சமூகத்திற்கு வரப்போகும் அவழநிலையை சிந்தித்து நாம் செயற்படுவதே எமது சமூகத்தில் அநியாயங்கள் இடம்பெறாமலும் எமது எதிர்கால சந்ததிகளின் சுபீட்ஷமான வாழ்வு கேள்விக் குறியாகாமல் இருக்கவும் வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை! ஒன்றுபட்டு தீர்க்கமான முடிவுகளை எடுப்போம்!!

தம்பாளை, முகம்மத் ஜெஸ்மில் அப்துல் கபூர்
 
 
முஸ்லிம் சமூகத்தை கருவருக்கும் கைங்கரியமே தகைமையற்ற அரசியல் உள்வாங்கள்!! முஸ்லிம் சமூகத்தை கருவருக்கும் கைங்கரியமே தகைமையற்ற அரசியல் உள்வாங்கள்!! Reviewed by Madawala News on 9/26/2017 01:54:00 PM Rating: 5