Kidny

Kidny

பிரதான மின்தடைகள் 20 , தொடரும் வேலை நிறுத்தப்போராட்டம் ..



மின்சார சபை ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மின் தடையினை வழமைக்கு கொண்டு வரமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு நாளை 12 மணிக்குள்  தீர்வினை பெற்றுத்தராவிடின் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கப் போவதாக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

மின்சார சபை ஊழியர்கள் நேற்று நண்பகல் 12 மணிமுதல் 48 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள அதேவேளை இதில் 95 % தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன.

இதுவரை பிரதான மின் தடைகள் 20 பதிவாகியுள்ள அதேவேளை பிரதேச ரீதியாக நூற்றுக்கும் அதிகமான மின் தடைகள் பதிவாகியுள்ளதாக மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.





பிரதான மின்தடைகள் 20 , தொடரும் வேலை நிறுத்தப்போராட்டம் .. பிரதான மின்தடைகள் 20 , தொடரும் வேலை நிறுத்தப்போராட்டம் .. Reviewed by Madawala News on 9/14/2017 06:13:00 PM Rating: 5