Ad Space avaiable

சுற்றி வளைப்பில் ஈடுபட்டவர்களுக்கு புண்ணியம் கிடைக்க பிரார்த்திக்கிறோம்..


ரோஹிங்யா அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த கல்கிஸ்ஸை குடியிருப்பில் சுற்றிவளைத்தவர்களுக்கு ஞானசார தேரர் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ள அதேவேளை அவர்களின் இந்த செயலை ஆசீர்வதிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ரோஹிங்யாவில் பாகிஸ்தான் உதவியுடன் ஆயுத குழுக்கள் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டதாலேயே அங்கு கலகம் வெடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று பொதுபல சேனா தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விழிப்புடன் உள்ளதாகவும் அரசியல்வாதிகள் அவர்களை பிழையாக வழிநடத்த முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் ரோஹிங்யாவில் இருந்து மட்டுமல்ல பாகிஸ்தானில் இருந்து 1800 பேர் வரை இங்கு நீர்கொழும்பு பெரியமுல்லையில் குடியேறியுள்ளனர்.மாலைதீவில் இருந்து 50000க்கு அதிகமானவர்கள் இங்கு வந்து குடியேறி உள்ளனர்.

பெரியமுல்லையில் ஒரு ஆண் 5 பெண்கள் 20 பிள்ளைகளுடன் ஒரு பாகிஸ்தான் முஸ்லிம் குடும்பம் உள்ளது.இது எத்தனை பேருக்கு தெரியும்.

நாம் அனைவரும் உத்தியோகபூர்வ அற்ற பொலிஸாக மாறவேண்டும் என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சுற்றி வளைப்பில் ஈடுபட்டவர்களுக்கு புண்ணியம் கிடைக்க பிரார்த்திக்கிறோம்.. சுற்றி வளைப்பில் ஈடுபட்டவர்களுக்கு புண்ணியம் கிடைக்க பிரார்த்திக்கிறோம்.. Reviewed by Madawala News on 9/27/2017 06:54:00 AM Rating: 5