Ad Space avaiable

டான் பிரசாதை அடக்க முடியாத அரசு,எப்படி இனவாதத்தைஅடக்கப் போகிறது?




இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத சிந்தனைகளை விதைக்கவும் செயற்பாடுகளை முன்னெடுக்கவும் ஒரு குழு எப்போதும் முயன்று கொண்டே இருக்கின்றது.அந்த குழுக்களை அடக்க ஆடித் திரியும் சிலரது வால்கள் ஒட்ட நறுக்கப்படல் வேண்டும்.அதில் ஒருவர் தான், இந்த டான் பிரசாத் என்பவராகும். மிக நீண்டகாலமாக முஸ்லிம்களுக்கு எதிரான பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார். 

அந்த வகையில் ரோகிங்கிய மக்கள் தொடர்பில் முக நூலில் பதிவிட்டுள்ள அவர் “தாங்கள் ஒன்றிணைந்து அவர்களை கொன்று விடுவோம் “ என கூறியுள்ளார். 

ரோஹிங்கிய அகதிகள் தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுப்பது இவ்வாட்சியாளர்களின் கடமையாகும். இலங்கை அரசானது சர்வதேச ரீதியிலான பல கொள்கைகளை கவனத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். அப்படி இருக்கையில் “ அவர்களை கொல்வோம் “ என எச்சரிப்பது தீவிர வாதத்துடன் தொடர்புடைய வார்த்தை பிரயோகங்களாகும். இலங்கை அரசு எப்படியான முடிவை எடுத்தாலும் அது வேறு விடயம். இப்படியான வார்த்தை பிரயோகங்களை பாவிக்க எத்தனை துணிவு வேண்டும்?

இவர் நீதி மன்றத்தால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ஒருவர். விஜயதாஸ ராஜபக்ஸவை அமைச்சிலிருந்து நீக்கியதால், ஞானசார தேரர் பயந்து ஜப்பான் சென்றுவிட்டதாக கூறினார்கள். சாதாரண டான் பிரசாத்தை அடக்க முடியாத அரசு, ஞானசார தேரரையா அடக்கப் போகிறது? இதற்கிடையில் இவர் இனவாதத்தை தூண்டும் வகையிலான கருத்துக்களை வெளியிடக் கூடாதென நீதி மன்றத்தால் எச்சரிக்கப்பட்டவர்.அண்மையில் முஸ்லிம் பெண் சிங்கள பெண்களுக்கு கருத்தடை மாத்திரைகளை வழங்குகிறார் போன்ற போலிக் குற்றச் சாட்டுக்களை கூட முன் வைத்திருந்தார்.

இவ்வரசு டான் பிரசாத் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீதியை நிலை நாட்ட வந்த நீதி அமைச்சராவது நீதியை நிலை நாட்டுவாரா?  எத்தனை முறை எப்படி கேட்டாலும், இவ்வரசு டான் பிரசாத் போன்றவர்களின் விடயத்தில் நீதியை நிலை நாட்டப் போவதில்லை.
டான் பிரசாதை அடக்க முடியாத அரசு,எப்படி இனவாதத்தைஅடக்கப் போகிறது? டான் பிரசாதை அடக்க முடியாத அரசு,எப்படி இனவாதத்தைஅடக்கப் போகிறது? Reviewed by Madawala News on 9/20/2017 09:17:00 AM Rating: 5