Kidny

Kidny

ஜம்மியதுல் உலமா முஸ்லிம் எம்பிக்கள் இடையே முக்கிய கலந்துரையாடல் ..




முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அகில இலங்கை ஜம்மியாவுக்கும் இடையே ஆன முக்கிய கலந்துரையாடல் தற்போது ஜம்மியாவின் தலைமையகத்தில் இடம்பெற்று வருகிறது.

கிழக்கு ,வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான காலம் இம்மாத இறுதியில் நிறைவடைய உள்ள நிலையில் தேர்தல் முறையில் திருத்தம் மேற்கொள்ளும் சட்டமூலம் ஒன்று நாளை மன்றில் வாக்கெடுப்பிற்கு சமர்பிக்கப்பட உள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாகாண சபைகளுக்கான தேர்தல் முறையில் சிறு திருத்தம் மேற்கொள்ள ஏற்கனவே சமர்பிக்கப்பட்ட சட்டமூலம்  ஒன்றை மேலதிக சில திருத்தங்களுடன் நாளை மன்றில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.

இது தொடர்பில் பாராளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஹக்கீம் , ரிசாத் இருவரும்  அமைச்சர் லக்‌ஷமன் கிரியல்லவுடன் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

நாளை குறித்த திருத்த சட்ட மூலம் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால் குறித்த திருத்தங்கள் நிவர்த்தி செய்யப்படும் வரை மாகாண சபை தேர்தல் ஆளுனரின் கீழ் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை தொகுதி ரீதியாக தேர்தல் நடத்தப்பட்டால் மாகாண சபை முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மியதுல் உலமா முஸ்லிம் எம்பிக்கள் இடையே முக்கிய கலந்துரையாடல் .. ஜம்மியதுல் உலமா முஸ்லிம் எம்பிக்கள் இடையே முக்கிய கலந்துரையாடல் .. Reviewed by Madawala News on 9/19/2017 10:02:00 PM Rating: 5