Ad Space avaiable

திருகோணமலையில் நிலவும் காணிப்பிரட்சனைகளுக்கு விரைவில் தீர்வு-



பல வருடங்களாக திருகோணமலையில் நிலவும் காணிப்பிரட்சனைகளுக்கான  நிரந்தர தீர்வை விரைவில்  பெற்றுத்தருவதாக காணி மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக உறுதியளித்துள்ளார்.

 திருகோணமலையில் நிலவும் காணி பிரட்சனைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் திருகோணமலை ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபுக்கும் அமைச்சர் கயந்த கருனாதிலக்கவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில்  அமைச்சரின் அலுவலகத்தில்  நடைபெற்றது.

பல வருடங்களாக குடியிருக்கும் காணிகளுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படாமை , பொதுமக்களின் விவசாயக் காணிகளில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது வன பரிபாலன சபையினால் விதிக்கப்படும் கட்டுபாடுகள், வியாபார நோக்கங்களுக்காக பொதுமக்களின் தனியார் காணிகளை  அரசியல்வாதிகளின் உதவியுடன் கைப்பற்றல்,முப்படையினரின் கட்டுபாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவித்தல் அல்லது அவர்களுக்கு மாற்று காணிகள் வழங்குதல் போன்ற பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இப்பிரட்சனைகளை ஆராய்ந்து தீர்க்கக்கூடிய பிரட்சனைகளுக்காண நிரந்தர தீர்வுகளை பெற்று தருவதாகவும் முப்படையினரின் கட்டுபாட்டில் உள்ள தனியார் காணிகளின் பிரட்சனைகள் தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவுடன் ஆலோசனை செய்வதாகவும் இதன்போது அமைச்சர் உறுதியளித்தார்.

 திருகோணமலையில் நிலவும் இப்பிரட்சனைகள்  தொடர்பாக நேரடியாக ஆராய்ந்து இது தொடர்பாக  அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அரச அதிகாரிகளுடனும் கலந்துரையாட  விரைவில் திருகோணமலைக்கு விஜயம் செய்வதாகவும் இதன்போது  அமைச்சர் உறுதியளித்தார்.

 

ஊடகப்பிரிவு   

    


AA06FEAF-9129-4FA7-8693-1ABD5F964425

3F6E8475-D491-49B6-AFC7-E5A6EBBAAF48

AED2C0CA-8F1D-4CCB-B3AA-4EAABDFB2491

திருகோணமலையில் நிலவும் காணிப்பிரட்சனைகளுக்கு விரைவில் தீர்வு- திருகோணமலையில் நிலவும் காணிப்பிரட்சனைகளுக்கு விரைவில் தீர்வு-     Reviewed by Madawala News on 9/23/2017 11:25:00 AM Rating: 5