Ad Space Available here

ஞானசார தேரர் ஆடாவிட்டாலும் அவரது சதை ஆடுகிறது ..
ஞானசார தேரர் மஹிந்த ஆட்சியில் செய்த அட்டூழியங்களுக்கு மஹிந்த நடவடிக்கை எடுப்பதற்கு தவறியதில் தவறுகள் இல்லாமலில்லை,ஆனால் ஞானசார தேரர் இரு சதி என்பதும் அவரை மஹிந்த அரசாங்கத்தில் இருந்த சிலர் பாதுகாத்தார்கள் என்பது அவர்கள் கூறும் நியாயமாகும்.

இருந்தாலும் தனிப்பட்ட முறையில் ஞானசாராவையும் அதன் கூட்டத்தையும் நேரடியாக சந்தித்து பேசியதாக தெரியவில்லை ஆனால் இந்த நல்லாட்சியின் ஜனாதிபதி மைத்திரி அவர்கள் ரகசியமாகவும் பரகசியமாகவும் ஞானசாராவை பலமுறை சந்தித்திருந்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதி அவர்கள் ஞானசாராவின் பொய்குற்றச்சாட்ட நம்பி வடக்கு கிழக்கில் தொல்பொருள் சம்பந்தமாக ஆராய்ந்து சொல்லுங்கள் என்று ஒரு பொறுப்பையும் வழங்கியிருந்தார்.

அதன் பிற்பாடு கிழக்கிலே ஞானசார எப்படி நடந்து கொண்டு வருகின்றார் என்பது எல்லோரும் அறிந்த விடயம்.நீதிமன்ற கட்டளையை எப்படி கிழித்தெரிந்தார் என்பதுடன் தூசன வார்த்தைகளாலும் பேசியிருந்தார் அதனை அனைத்து  நீதிமன்றங்களும் கண்டும் காணாமல் இருந்துவிட்டது.

அது ஒருபுறம் இருக்க பொதுபலசேனாவின் முக்கியஸ்தர் ஒருவருக்கு மஹியங்கனை தொகுதியின் சு.கட்சி அமைப்பாளர் பதவியும் கொடுத்து கௌரவபடுத்தியிருந்தார் ஜனாதிபதி.

அந்த அமைப்பாளர் மஹியங்கனையில் உள்ள முஸ்லிம் வர்த்தகரின் கடையை எரிப்பதற்கு பின்னாலிருந்து செயல்பட்டார் என்று பகிரங்கமாகவே (உலருவாயர்) அசாத்சாலி அவர்களும், அந்த கடை முதலாளியும் கூறியிருந்தார்கள்.அதற்கு இந்த ஜனாதிபதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதே போன்று பொதுபலசேனாவின் முன்னாள் முக்கிய பிக்குவான ஒருவருக்கு அண்மையில் முக்கிய பதவியொன்றையும்  வழங்கி கௌரவபடுத்தியுள்ளார்.

அடுத்ததாக நல்லாட்சி அரசாங்கத்தில் அசாத்சாலி, முஜிபுர் ரஃமான், ரிசாட் பதியுதீன் போன்றோர் இந்த ஞானசாராவுக்கு எதிராக பொலிசில் பல முறைப்பாடுகளைச்  செய்திருந்தார்கள்.அந்த முறைப்பாடுகளுக்கு இதுவரை பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை.ஆனால் மஹிந்த ஆட்சியில் ஞானசாராவுக்கு எதிராக  பொலிசில் போடப்பட்ட வழக்குகள்தான் இன்றும் நடந்து வருகின்றது என்பதை நாம் இங்கு கவணிக்க வேண்டும்.

நான்கு தனிப்படைகள் அமைத்து தேடப்பட்ட ஞானசாராவை சில நாட்களுக்கு பிறகு சாதாரண சட்டத்தின் கீழ் பிணையில் விடுதலை செய்யுமாறு பொலிசார் நீதவானிடம் கேட்டு கூனிக்குறுகி நின்றபோது, நீதிபதி அவர்கள் பொலிசாரைப் பார்த்து நீங்கள் நடந்து கொள்ளும் விதம் நீதித்துறைக்கே அவமானம் என்று கூறிய விடயமும் நடந்தது. 

அந்தளவுக்கு இந்த நல்லாட்சியும் ஜனாதிபதி மைத்திரி அவர்கள் ஞானசாரா விடயத்தில் கரிசனையோடு நடந்து கொண்டு வருகின்றார்.ஜனாதிபதியும் நீதியமைச்சரும்தான்  இதற்கு காரணம் என்று அசாத்சாலி அவர்கள் பகிரங்கமாகவே குற்றம் சாட்டியிருந்தார்.

இன்னொரு விடயத்தையும் சொல்லவேண்டும். பெசன்பார்க் ஞானசார கும்பலினால் திட்டமிட்டு எறிக்கப்பட்டபோது அங்கே இருந்த வீடியோ ரெக்கோடரை பாதுகாப்பாக வெளியே கொண்டுவந்த அந்த கடையின் ஊழியரை பொலிசார் கண்மூடித்தனமாக தாக்கியது மட்டுமல்ல அந்த ரெக்கோடரை பறித்தும் சென்றார்கள். அதன் பின் அந்த கதை முடிந்துவிட்டது.

அதன் பின் தெஹிவளையில் ஒரு கடை எரிக்கப்பட்டது அதன் வீடியோவை பொலிசார் வருவதற்குமுன் அசாத்சாலி அவர்கள் சென்று கைப்பற்றியதன் காரணமாக அந்த செயலை செய்தவன் யாரென்று கண்டுபிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர், பின்னாலில் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டார். 

இதனை ஜனாதிபதியின் ஊதுகுழலான அசாத்சாலி அவர்களே இது அநியாயம் என்று புலம்பினார்.அதற்கு பிறகு அசாத்சாலி அவர்களை ஜனாதிபதி பங்களாதேஷ் அழைத்துச் சென்றார் அதோடு அதன் கதையும் முடிந்துவிட்டது.

கண்டிப் பகுதியை சேர்ந்த ஒரு முஸ்லிம் நபர் முகநூலில் யாருக்கோ பதிலளிக்கும் போது புத்தரை அவமதித்து விட்டார் என்று கூறி 90 நாட்கள் அவரை சிறையில் அடைத்தார்கள் அதனை யாரும் கண்டு கொள்ளவில்லை.

அதன் பிற்பாடு மரிச்சிக்கட்டியை ஞானசாராவின் கதையைக்கேட்டு வர்த்தமானிமூலம் காடு என்று எல்லைப்படுத்தினார் ஜனாதிபதி.அம்பாரை மாவட்டத்திலுள்ள மாயக்கல்லில் சிலைவைப்பதற்கும், அதன் பக்கத்தில் உள்ள தனியார் காணியை மீட்டு பன்சல அமைக்க உதவி செய்யுமாறும் ஜனாதிபதி அம்பாரை அரசாங்க அதிபருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.அதனை வைத்துக் கொண்டு ஞானசார என்ன பாடுபட்டார் என்பது உலகமறிந்த விடயமாகும்.

இப்படி இன்னும் பல சம்பவங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.இப்படியான நடவடிக்கைகள் ஞானசாராவுக்கு பின்னால் இருப்பது நல்லாட்சியும் ஜனாதிபதி மைத்திரி அவர்கள்தான் என்பது ஊர்ஜீதமாகின்றது. 

தற்போது நீதிமன்ற பிணையில் உள்ள ஞானசாரா ஜப்பான் சென்றுள்ளார் இதல்லாம் சாதாரண மனிதர்களினால் முடியாத காரியம்.

இன்று ஞானசார அமைதியாக இருக்கும் ஞானசார தேரர் தேர்தல்கள் ஒன்று அறிவிக்கப்பட்டால் முஸ்லிம்களின் வாக்குகளை நல்லாட்சி அள்ளி எடுக்கவேண்டும் என்றதற்காக மீண்டும் சிறுபான்மை மக்கள் மீது தூவேசத்தை அள்ளி வீச வாய்ப்பு உள்ள அதேவேளை ஞானசார தேரர் மஹிந்தவின் அடியாள் என்று நம்பி நல்லாட்சிக்கு வாக்களிக்க ஒரு கூட்டமும் உள்ளது.

இதற்கெல்லாம் பின்னாலிருந்து ரணில் விக்ரமசிங்கவே  படம் காட்டிக்கொண்டிருக்கின்றார் என்பதே எமது குற்றச்சாட்டாகும்.

எது எவ்வாறு ஆயினும் சதிகாரர்களுக்கெல்லாம் சதிகாரனான இறைவன் இதற்கு பதில் வழங்குவான் என்று நம்புகின்றோம்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.
ஞானசார தேரர் ஆடாவிட்டாலும் அவரது சதை ஆடுகிறது .. ஞானசார தேரர் ஆடாவிட்டாலும் அவரது சதை ஆடுகிறது .. Reviewed by Madawala News on 9/16/2017 05:12:00 PM Rating: 5