Kidny

Kidny

வீட்டு பூந்தொட்டி உடைந்து விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப பலி.


வீட்டின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த பூந்தொட்டியொன்று உடைந்து வீழ்ந்ததில் அதில் சிக்கி குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக மாரவில காவற்துறை துறை தெரிவித்துள்ளது.

நாத்தன்டிய - துன்கன்னாவ , பண்டாரநாயக்கபுர பகுதியை சேர்ந்த 04 வயதுடைய ஆண் குழந்தையொன்றே இதன் போது உயிரிழந்துள்ளது.

இன்று மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த குழந்தை குறித்த பூந் தொட்டியில் ஏற முயற்சித்துள்ள நிலையில் , அது உடைந்து வீழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பூந்தொட்டி அமைக்கப்பட்டிருந்த கொங்ரீட் தூணில் குழந்தை சிக்குண்ட நிலையல் , குழந்தையின் உடலில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் , சிகிச்சைக்காக குழந்தை உடனடியாக மாரவில ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே குழந்தை உயிரிழந்துள்ளது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
வீட்டு பூந்தொட்டி உடைந்து விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப பலி. வீட்டு  பூந்தொட்டி உடைந்து விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப பலி. Reviewed by Madawala News on 9/05/2017 06:45:00 PM Rating: 5