Ad Space avaiable

மியன்மார் இராணுவத்துக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்தி விட்டோம். பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு.

மியன்மார் இராணுவத்துக்கு நிதியுதவி வழங்குவதை பிரித்தானிய அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.

மியன்மாரின் ராக்கெய்ன் மாநிலத்தில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது.

மியன்மார் இராணுவத்துக்கு ஒருவருடத்துக்கு வழங்கப்பட்டு வந்த 300,000 பவுன்களை தற்போதைய நிலைமைகள் சீராகும் வரை இடைநிறுத்தியுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


மியன்மாரின் ராக்கெய்ன் மாநிலத்தில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களால் சுமார் 400,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேஷுக்கு இடம்பெயர்த்துள்ள அதேவேளை, இந்த வன்முறைகள் பாடப்புத்தக உதாரணம் (textbook example) என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதேவேளை, ராக்கெய்ன் மாநிலத்தில் இடம்பெறும் வன்முறைகள் மியன்மார் இராணுவத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மியன்மார் இராணுவத்துக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்தி விட்டோம். பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு. மியன்மார் இராணுவத்துக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்தி விட்டோம். பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு. Reviewed by Madawala News on 9/20/2017 04:47:00 PM Rating: 5