Kidny

Kidny

பட்ஜெட் 2018... அரசின் மொத்த செலவு மற்றும் வருமானங்கள் (பில்லியன் ரூபாக்களில்) இவைதான்.


2018 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த செலவினம் 3,982 பில்லியன் ரூபா எனவும் மொத்த வருமானம் மற்றும் வெளிநாட்டு உதவி என்பன 2,175 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இணைஅமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

இதன் பிரகாரம் 6 பில்லியன் ரூபா முற்கொடுப்பனவு செலவுடன் சேர்த்து 1,813 பில்லியன் ரூபா துண்டுவிழும் தொகையை உள்நாட்டு
மற்றும் வெளிநாட்டு கடன்களினூடாக பெற அரசாங்கம் திட்டமிட்டுள் ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலம் இம்மாத இறுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருப்பதோடு வரவு செலவுத்திட்ட உரை நவம்பர் 09 இடம் பெறும் எனவும் அவர் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று(13) அரசாங்கதகவல் திணைக்களத்தல் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

 2018 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக் கீட்டுச் சட்டமூலம் செப்டம்பர் மாத இறுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முன்னுரிமை வழங்க வேண்டிய விடயங்கள் என் பவற்றின் அடிப்படையில் 2018 -2020 மத்திய கால வரவு செலவு கட் டமைப்பிற்கு வழங்கக் கூடிய முழு மையான வளங்கள் குறித்து இதில் கவனம் செலுத்தப்பட்டது.

இதன் பிரகாரம் திறைசேரியூடாக வரவு செலவுத்திட்ட மதிப்பீடு தயாரிக்கப் பட்டது. அமைச்சுக்கள், மாகாண சபைகள் என்பவற்றுடன் நடத்தப்
பட்ட வரவு செலவுத்திட்ட பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதன் பிரகாரம் 2018 நிதியாண் டிற்கான அரசாங்கத்தின் மொத்த செலவு ரூபா 3,982 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த நிதி அரசாங்க கடனை செலுத்துதல், விதவைகள் மற்றும் அநாதைகளுக்கான பங்களிப்புநிதி அடங்கலானதற்பொ ழுது பாராளுமன்றத்தினால் அனும திக்கப்பட்ட சட்டங்களுக்கு அமைய முன்னெடுக்கப்படும் செலவுகள் 2,005.1 பில்லியன் ரூபா என மதிப் பிடப்பட்டுள்ளது.

இந்த செலவுதவிர மொத்த செலவான 1,977 பில்லியன் ரூபாவிற்காக நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தினூடாக அதிகாரம் வழங்கப்பட
வேண்டியுள்ளது.

அதில் 2018 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மீண்டுவ ரும் செலவினம் 1,308.9 பில்லியன் ரூபா எனவும் மூலதனச் செலவினம் 668 பில்லியன் ரூபா எனவும் மதிப்பி டப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் அரசின் வரு மானம் மற்றும் வெளிநாட்டு உதவி கள் என்பன 2.175 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அரசாங்கத்தின் முற்கொடுப் பனவு செலவு ஆறு பில்லியன் ரூபா என கணிப்பிடப்பட்டுள்ளது .இதன் பிரகாரம் உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு நிதி மார்க்கங்களினூடாக கடன் பெற வேண்டியுள்ளது. 2018 நிதியாண்டிற்கான நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தை வர்த்தமானியில் வெளியிட்ட பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள் ளது.

இதேவேளை 2018 வரவு செலவுத் திட்ட விவாதம் தொடர்பான உத்தேச நிகழ்ச்சிநிரல் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு விளக்கியுள்ளார்.

அதன் பிரகாரம் நவம்பர் (09) வரவு செலவுத்திட்ட உரை இடம் பெறும். நிதி ஒதுக்கீட்டு சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் (10) முதல் (15) வரை நடத்தப்படும். குழு நிலை விவாதம் நவம்பர் (16) ஆரம்பிக்கப் பட்டு இரண்டாம் வாசிப்பு மீதான வாக் கெடுப்பு டிசம்பர் (09) நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் 2018... அரசின் மொத்த செலவு மற்றும் வருமானங்கள் (பில்லியன் ரூபாக்களில்) இவைதான். பட்ஜெட் 2018... அரசின் மொத்த செலவு மற்றும் வருமானங்கள் (பில்லியன் ரூபாக்களில்) இவைதான். Reviewed by Madawala News on 9/14/2017 09:00:00 AM Rating: 5