Ad Space avaiable

பேராதனை வைத்தியசாலை மருத்துவர்கள் அசத்தல்.. சிறுவனின் மண்டையில் துப்பாக்கி குண்டு நீக்கப்பட்டது.


மூன்று வயது ஒன்பது மாதங்கள் நிரம்பிய பாலகன் ஒருவனின் மண்டையோட்டில் சிக்கியிருந்த சுழல் துப்பாக்கியின் உருண்டை வடிவிலான சிறிய குண்டொன்றை பேராதனை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலை மருத் துவர்கள் அடங்கிய குழுவொன்று வெற்றிகரமாக அகற்றியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவ தாவது,

குறித்த சிறுவனின் தலையைக் கிழித்துக்கொண்டு இடது பக்கசெவி வழியாக ஊடுருவிச் சென்ற மேற்படி குண்டு அவனது வலது பக்க தலைக்குள் சிக்குண்டு இருந்துள்ளது.

அவனது தலையில் அல்லது மூளையில் உள்ள இரத்தக் குழாய்கள் எதற்கும் சேதம் ஏற்படா மல் இருந்ததனால் நான்கு மணிநேரப் போராட்டத்தின் பின்னர் அந்தக் குண்டை அகற்றி அவனது உயிரைக் காப்பாற்ற தங்களால் முடிந்ததாக செவி, மூக்கு, தொண்டை சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் சிசிர பண்டார அளுத்கம தெரிவித்தார்.


குறித்த சிறுவனின் தாயார் இது பற்றி தெரிவிக்கையில்,

"எனது மகன் வீட்டில் எனது சகோதரியின் பிள்ளையுடன் கடந்த 11 ஆம் திகதி முற்பகல் ஒன்பது மணியளவில் விளையாடிக்கொண்டிருந்தான்.


மகனின் அழுகைச் சத்தத்தைக் கேட்டு அங்கு ஒடிப்போய்ப் பார்த்த போது எமது சுழல்துப்பாக்கி தவறுதலாக வெடித்து சிறிய ரவையொன்று அவனது தலையைக் கிழித்திருந்த தைக் கண்டு அவனை கேகாலை
வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம்" என தெரிவித்தார்.

அங்கு ஆரம்ப சிகிச்சையின்பின்னர், குறித்த சிறுவன் பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட் டான்.

சத்திர சிகிச்சையின் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த குறித்த சிறுவன் தற்போது குணமடைந்து வருவதாக டொக்டர் டீ.ஆர். கே. ஹேரத் தெரிவித்தார்.

பேராதனை வைத்தியசாலை மருத்துவர்கள் அசத்தல்.. சிறுவனின் மண்டையில் துப்பாக்கி குண்டு நீக்கப்பட்டது. பேராதனை வைத்தியசாலை மருத்துவர்கள் அசத்தல்.. சிறுவனின் மண்டையில் துப்பாக்கி குண்டு நீக்கப்பட்டது. Reviewed by Madawala News on 9/18/2017 10:48:00 AM Rating: 5