Kidny

Kidny

இலங்கையின் பிரபல குத்துச் சண்டை வீரர் திடீர் மரணம்.


இலங்கையின் பிரபல குத்துச் சண்டை வீரரான கயான் சஞ்சீவ ஜயவீர நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்துள்ளார்.

இலங்கைக்காக பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங் குபற்றியிருந்த இவரின் உயிரிழப்பு இலங்கை குத்துச் சண்டைக்கு பாரிய இழப்பாகும்.

2015 ஆம் ஆண்டு பின்லாந்தில் இடம்பெற்ற 36 ஆவது டேமர் குத்துச் சண்டைப் போட்டியில் வெண்க லப்பதக்கத்தை வென்று நாட்டுக்கு பெருமை ஈட்டிக்கொடுத்தார். இது தவிர தேசிய ரீதியில் பல்வேறு பதக்கங்களையும் வெற்றிருந்தார்.

5 ஆண்டுகளாக தேசிய சம்பிய னாக திகழ்ந்த 25 வயதான கயான் சஞ்சீவ, தேசிய குத்துச் சண்டைப் போட்டியில் தொடர்ச்சி யாக இரண்டு தடவைகள் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பிரபல குத்துச் சண்டை வீரர் திடீர் மரணம். இலங்கையின் பிரபல குத்துச் சண்டை வீரர் திடீர் மரணம். Reviewed by Madawala News on 9/10/2017 12:42:00 PM Rating: 5