Ad Space avaiable

பத்தாயிரம் போலி கனேடியன் டொலர்களை மாற்றுவதற்கு முயற்சித்த இருவர் சிக்கினர்.


-பாறுக் ஷிஹான்-

 போலி கனேடியன் டொலர்களை மாற்றுவதற்கு முயற்சித்த இருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இருவரும் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் நகரில் உள்ள நாணய மாற்று நிலையம் ஒன்றுக்கு இளைஞர் ஒருவர் 10100 போலி கனேடியன் டொலர்களை மாற்றுவதற்கு   சென்றுள்ளார்.

 இதன் போது  நாணய மாற்று சேவை பிரிவில் உள்ளவர்    கனேடியன் டொலர்கள் அனைத்தும் போலி என  அறிந்த நிலையில்  யாழ்பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்நிலையில்   சம்பவ இடத்திற்குச் சென்ற புலனாய்வுப் பிரிவினர் நாணயம் மாற்றுவதற்கு வந்த இளைஞரை கைது செய்ததுடன் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர்  சித்தன்கேணிப் பகுதியில் உள்ள   வர்த்தகர் ஒருவர் தான்  போலி நாணயங்களை மாற்றிக்கொண்டு வருமாறு தனக்கு வழங்கியதாக     பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனை அடுத்து  சித்தன்கேணிப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகரும் போலி நாணயங்களை மாற்ற வந்த நபரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
விசாரணையின் பின்னர் யாழ்.நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதுடன் குறித்த 10100 போலி கனேடியன் டொலரும் இலங்கை ரூபாவின் மதிப்பின்படி பல இலட்சம் ரூபா என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பத்தாயிரம் போலி கனேடியன் டொலர்களை மாற்றுவதற்கு முயற்சித்த இருவர் சிக்கினர். பத்தாயிரம்  போலி கனேடியன் டொலர்களை மாற்றுவதற்கு முயற்சித்த இருவர் சிக்கினர். Reviewed by Madawala News on 9/21/2017 04:32:00 PM Rating: 5