Kidny

Kidny

இந்த வருடத்தில் இன்று வரை 30,000 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை அடைந்தது இலங்கை மின்சார சபை.


இந்த வருடத்தில் இன்று வரை இலங்கை மின்சார சபை 30,000 மில்லியன் ரூபாய் பணத்தை இழந்துள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலமை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் திட்டங்களை சரியான முறையில் செயற்படுத்துவது இல்லை என, அச்சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு குறிப்பிட்டுள்ளார்.

2018ஆம் வருடத்துக்கான திட்டங்கள் முன்கூட்டியே இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. ​அதில் பொது உட்கட்டமைப்பு ஆணைக்குழு பல திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

இதற்கு மின்சார பொறியியலாளர்கள் வலுவான எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். இலாபத்தினை பெறக்கூடிய எந்ததொரு திறமையான திட்டமும் இலங்கை மின்சார சபைக்கு இல்லை என சௌமிய குமாரவடு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் அபிவிருத்தி பணிப்பாளர் சுலக்சண ஜயவர்தனவிடம் கேட்டபோது, இந்த பிரச்சினைக்கு தீர்வை விரைவாக பெற்றுக்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் தங்களுடைய பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்காவிட்டால் எதிர்க்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, மின்சார பொறியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த வருடத்தில் இன்று வரை 30,000 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை அடைந்தது இலங்கை மின்சார சபை. இந்த வருடத்தில் இன்று வரை  30,000 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை அடைந்தது இலங்கை மின்சார சபை. Reviewed by Madawala News on 9/11/2017 03:04:00 PM Rating: 5